ஓய்வை அறிவித்த பானுக்கவிடம் லசித் மாலிங்க விடுத்துள்ள கோரிக்கை…!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இளம் தேசிய கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.
பானுக ராஜபக்ச தனது ஓய்வுக் கடிதத்தை இந்த வார தொடக்கத்தில் (03) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளித்திருந்தார்.
அவர் தனது கடிதத்தில், SLC அறிமுகப்படுத்திய சமீபத்திய உடற்பயிற்சி நிபந்தனைகளுடன், குறிப்பாக தோல் மடிப்பு (Skin Fold) நிலைகளுடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, இலங்கை கிரிக்கெட்டுக்கு பானுக ராஜபக்ச இன்னும் பலவற்றை வழங்க வேண்டியவர் என தான் நம்புவதாக மாலிங்க தெரிவித்தார்.
சர்வதேச அளவில் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எளிதான காரியம் அல்ல என்று கூறிய மலிங்க, வீரர்கள் எப்போதும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
“உங்கள் நாட்டை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவது எளிதான காரியம் அல்ல, வீரர்கள் எப்போதும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இலங்கை கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய கொடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எனவும் மாலிங்க தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.