கடந்த 100 ஆண்டுகளில் அஷ்வினின் புதிய உலக சாதனை…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட்டில் சென்னை மைந்தன் ரவிசந்திரன் அஷ்வின் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியொன்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளர் எனும் சாதனையையே அஷ்வின் தனதாக்கினார்.

2 வது இன்னிங்சில் புதிய பந்தில் முதல் ஓவரை வீசிய அஷ்வின், முதல் பந்திலேயே இங்கிலாந்தின் ஆரம்ப வீரர் ரோரி பேரன்ஸை ஆட்டமிழக்க செய்தார்.

இதற்கு முன்னர் இந்த சாதனையை பெர்ட் வொக்லெர் எனும் சுழல் பந்துவீச்சாளர் 1907 ம் ஆண்டிலும், பாபி பீல் எனும் சுழல் பந்து வீச்சாளர் 1888 லும் நிலைநாட்டினார்.

ஆயினும் கடந்த 100 ஆண்டுகளில் இந்த சாதனை புரியும் முதல் சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் என்பதும் முக்கியமானது.

#INDvENG