கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச ஆட்டங்களிலும் அதிக சதங்கள் பெற்றவர்கள் விபரம் ..!

கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து வகையான சர்வதேச ஆட்டங்களிலும் அதிக சதங்கள் பெற்றவர்கள் விபரம் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 4-வது போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் மூன்றாவது நாளில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

ரோகித் சர்மா வெளிநாட்டு மண்ணில் தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார், இது அவருடைய 8 வது டெஸ்ட் சதமாக அமையப் பெற்றது, இது மாத்திரமல்லாமல் ஆரம்ப வீரராக ரோகித் சர்மா பெற்றுக்கொண்ட ஐந்தாவது சதமாக இந்த சதம் பதிவானது.

கடந்த 4 ஆண்டுகளில் ஒரு நாள் ,டெஸ்ட் மற்றும் டுவென்டி 20 போட்டிகள் அடங்கலாக அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் 25 சதங்கள் பெற்று ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.

விராட் கோலி 23 சதங்களை பெற்று 2 இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளில் பெரும்பாலான சர்வதேச சதங்கள் ???

25 – ரோஹித் சர்மா
23 – விராட் கோலி
16 – ஜோ ரூட்
15 – பாபர் அஸாம்
14 – ஜானி பேர்ஸ்டோ
11 – ஆரோன் பின்ச்

Previous articleஅபார வெற்றியுடன் தொடரை சமன் செய்தது தென்ஆப்பிரிக்க அணி..!
Next articleடொன் பிரட்மன், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்து ரோகித் சர்மா- என்ன பட்டியல் தைரியுமா ?