கடந்த IPL ல் அதகளம் புரிந்துவிட்டு இந்த IPL ல் காணாம்போன 3 இளம் வீர்ர்கள்…!

கிரிக்கெட் என்பது திறமையில் மட்டுமல்ல அதிஸ்டத்திலும் தங்கியிருக்கிறது…!

கிரிக்கெட் விளையாடும் பலர் தமது திறமையால் மட்டுமல்ல அதிஷ்டத்தாலும்தான் கிரிக்கெட்டில் தமது திறமையை வெளிப்படுத்தி முன்னணி வீரர்களாக மிளிர்கின்றனர்.

ஏராளமான வீரர்கள் தவறான காலத்தில் வந்துதித்த காரணத்தால் கிரிக்கெட்டில் கோலோச்ச முடியாது மறைந்தே போனார்கள்.

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அமுல் முசும்தார் அதில் பிரதானமானவர். சச்சின், வினோத் கம்பளி ஆகியோர் பாடசாலைக் கிரிக்கெட்டில் 326 ,349 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று தமக்கிடையில் 664 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற போட்டியில், அடுத்து ஆடுவதற்கு தயாராகவிருந்தவர் இந்த அமுல் முசும்தார்.

 

சச்சின், சவ்ரவ், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் கோலோச்சிய காலத்தில் கிரிக்கெட் ஆடியவர் என்பதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் போட்டி ஓட்டங்களைக் குவித்தும் சர்வதேச அறிமுகமேயின்றி கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தார். தமிழகத்தின் ஸ்ரீதரன் ஸ்ரீராமும் இந்த வகைக்குள் உள்ளடக்கம்.

வாசிம் ஜாபர் ஓரளவுக்கு வாய்ப்புக்களை பெற்றார், ஆயினும் பத்ரிநாத் போன்றவர்கள் ஒருசில போட்டிகளுக்கு பின்னர் அணிக்குள்ளே நுழைய முடியாமல் போனதும் துரதிஸ்ட்மே.

தோனி காலத்தில் கிரிக்கெட் விளையாடியதால் தினேஷ் கார்த்திக், பார்திவ் பட்டேல், நாமன் ஒஜா, ஷெல்டன் ஜாக்சன், போன்றோர் திறமையாளர்களாக தங்களை நிரூபிப்பதற்காக பல்லாண்டுகளாக போராடினார்கள்.

அதேபோன்று IPL போட்டிகளுக்குள்ளும் பல் உதாரணங்கள் இருக்கின்றன.

ஒரு சில வீரர்கள் சென்று அடைபட்டுக் கொள்கின்ற அணிகள் காரணமான அவர்களால் வெளியில் வர முடியாமல் இருக்கின்றது,

1.சேத்தன் சஹரியா

சங்ககாராவின் கண்டுபிடிப்பு காரணமாக கடந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமாகி கலக்கியவர், 14 போட்டிகளில் 14 விக்கெட்டுக்களை அள்ளியவர் , சராசரி 8.19 ,IPL திறமைமூலம் அதே ஆண்டிலேயே இந்திய தேசிய அணியிலும் இடம் பிடித்தவர் சஹரியா.

ஆனால் இந்த ஆண்டு அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா ?

இம்முறை டெல்லி அணிக்குள் சென்று அகப்பட்டுக் கொண்டதால் அவரால் இதுவரை ஒரு போட்டியிலும் விளையாட முடியாதுள்ளது, அந்த அணியில் இடமபிடித்துள்ள காலீல் அகமத் , ஷர்துல் தாகூர் ஆகியோர் சஹரியாவை பின்தள்ளிவிட்டு டெல்லி அணியில் தமக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பும்ராவுக்கு ஜோடி சேர்ந்து பந்துவீச ஒரு பந்து வீச்சாளரை தேடும் மும்பை இந்தியன்ஸ் அணியிலோ, அல்லது தீபக் சஹார் இல்லாத சென்னை அணியிலோ இடம்பெறாதது சஹரியாவின் கஷ்டகாலம் எனலாம்.

2 .KS பரத் –

கடந்தமுறை RCB அணியில் அசத்திய ஒருவர் , அந்த அணியின் விக்கெட் காப்பாளராக, துடுப்பாட்ட வீரராக அருமையான வெற்றிகளை அணிக்கு பெற்றுக்கொடுத்த ஒருவர்.

இந்த வீரரை RCB அணி வெளியில் விட்டிருக்கவே கூடாது என்பது என் கருத்து, ஏலத்தில் கடுமையாக போராடி இவரை அணிக்குள் கொண்டு வந்திருப்பார்களாக இருந்தால் பாப் டு பிளசிஸ் உடன் இணைந்து ஆரம்ப இணைப்பாட்டத்தில் அருமையாக இன்னிங்க்ஸை ஆரம்பித்திருப்பார்.

ஆனால் RCB அணியில் இடமில்லாது போன பரத், டெல்லி அணியில் பெஞ்சில் இருக்கிறார், ஆனால் அனுஜ் ரவாத் எனும் இளம் வீரர் RCB அணியில் விக்கெட் காப்பாளராகவும் ஆரம்ப வீரராகவும் விளையாடுகிறார்.

அனுஜ் ரவாத் அதிஷ்டாகாரன்,KS பரத் இந்த இடத்தில துரதிஷ்டாசாலி.

3. கார்த்திக் தியாகி .

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த IPL பருவ காலத்தில் கலக்கிய ஒரு இளம்புயல் ,அந்த அணியின் நிரந்தரமாக இடம்பெற்றிருந்தவர். பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவையான நிலையில் தியாகி வீசிய அந்த இறுதி ஓவரை நீங்கள் இலகுவில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இம்முறை சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருக்கும் கார்த்திக் தியாகி, இம்முறை எதுவித IPL போட்டிகளிலும் இதுவரை விளையாடியிருக்கவில்லை.

புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரன் மாலிக், மார்கோ ஜான்சன் என்று வேகத்தில் பட்டையைக் கிளப்பும் சான் ரைசேர்ஸ் அணியில் தியாகி இடம்பெற வேண்டுமானால் மேற்குறித்த எவராவது உபாதைக்குள்ளாக வேண்டும்.

இல்லையேல் கார்த்திக் தியாகியை இம்முறை முழுவதுமாக நம்மால் IPL காலத்தில் காண முடியாது போகும்.

IPL போட்டிகளின் 50 சதவீதமான ஆட்டங்கள் இதுவரை நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இவை முக்கிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா, தேவாலட் ப்ரேவிஸ், லக்னோ அணியில் ஆயுஷ் படோனி , சென்னையில் சௌதாரி, இன்னும் குஜராத் அணியில் யாஷ் டயல், பஞ்சாப் அணியில் வைபவ் ஆரோரா என்று இளம் வீரர்கள் இந்த ஆண்டுக்கான IPL அறிமுகங்கள் எனலாம்.

ஆனால் கடந்த ஆண்டு மிக சிறப்பாக ஜொலித்தும் அவர்கள் சேர்ந்துள்ள அணிகளின் நிலைமைகள் காரணமாக எதுவித போட்டிகளிலும் இதுவரை விளையாட முடியாது உள்ளமை தியாகி, பரத், சஹரியா போன்றோருக்கு உண்மையில் துரதிஷ்டம் எனலாம்.

வாழ்க்கையில் ஜெயிக்க திறமை மட்டுமல்ல, கூடவே காலமும் ,நேரமும் கைகொடுக்க வேண்டும் என்பது இதனைத்தான்.

இல்லையேல் நாமும் KS பரத், கார்த்திக் தியாகி, சஹரியா போன்று பெஞ்சில் உட்க்கார்ந்துகொண்டு , தண்ணீர்போத்தல் சுமந்தே காலத்தை முடித்துவிடும் நிலை நேர்ந்துவிடும்.

வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது.

IPL2022

T.Tharaneetharan
25.04.2022