கடவுச்சீட்டு விவகாரம் Dasun Shanaka விளக்கம்
மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் இடம்பிடித்த Dasun Shanaka நேற்றைய தினம் மற்றைய அணியினருடன் மேற்கிந்தியத்தீவுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
முதலில் Shanaka தனது கடவுச்சீட்டை தொலைத்ததால் அவரால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என அறிவிக்கப்பட்டது. எனினும் தற்போது இது சம்மந்தமாக Dasun Shanaka விளக்கியுள்ளார்.
2 வருடங்கள் முன்பாக செல்லுபடியான US விசா இருந்த கடவுச்சீட்டு தொலைந்ததாகவும் அவ் விசா தற்சமயம் இல்லாத காரணத்தினாலேயே அவரால் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Thirimanne Covid தொற்று உறுதி செய்யப்பட்டு அணியினர் அனைவரும் தனிமைப்படுத்தலில் இருந்தமையால் உரிய நேரத்தில் இப் பயணத்திற்கான விசா நடைமுறைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கூடிய சீக்கிரம் Dasun Shanaka மேற்கிந்தியத்தீவுகள் பயணம் செய்ய முயற்சி செய்வதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.