கண்டி அணிக்கு தலைவராகும் இலங்கையின் முன்னணி சகலதுறை வீரர்…!

ஹசரங்கவுக்கு தலைமைப் பொறுப்பு ?

இலங்கையின் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவுக்கு கண்டி ஃபால்கன்ஸ் தலைமை பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் சிலோன் பிரீமியர் லீக் போட்டியை மூன்றாவது முறையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், வீரர் ஏலமும் அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

இதேவேளை, கடந்த போட்டிகளில் IPG  தலைமையில் களமிறங்கிய கண்டி அணி, இம்முறை பாரிய அனுசரணையுடன் அபார வெற்றியுடன் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

கண்டி ஃபால்கான்ஸ் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ‘பசிபிக் வென்ச்சர்ஸ் & பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்’ நிறுவனங்களை வைத்திருக்கும் இந்திய தேசிய தொழிலதிபர் “பிரவேஸ் கான்” என்பவருக்கு சொந்தமானது.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த அபுதாபி டி10 லீக்கில் விளையாடிய ‘மராத்தா அரேபியன்ஸ்’ அணியின் இணை உரிமையாளராக பிரவேஸ் கான் இருந்தார்.

இதேவேளை, கண்டி ஃபால்கன்ஸ் அணியின் தலைவராக இலங்கையின் சூப்பர் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க பதவியேற்கவுள்ளார் என்பது இங்கு பரபரப்பான செய்தியாகும்.

எல்.பி.எல் தொடக்கப் போட்டியிலிருந்து Jaffna அணியுடன் விளையாடிய வனிந்து ஹசரங்க, இந்த ஆண்டு அணி நிர்வாகத்திடம் விசேட கோரிக்கையை முன்வைத்து வெளியேறினார்,

அதன்படி கண்ட அணி, வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை அணியில் சேர்த்தது. அதன்படி, ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க, கேப்டன் வனிந்துவாக கிரிக்கெட் உலகில் பிரவேசிக்க உள்ளதாக கிரிக்கெட் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரத்தில் இலங்கை அணியின் முன்னாள் சகல துறை அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூரிய கண்டி அணியின் ஆலோசகராக வழிகாட்டியாக (Mentor) செயற்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சனத் ஜெயசூரிய ஹசரங்க கூட்டணி என்ன செய்கிறது என்று பார்க்க காத்திருப்போம் ?

YouTube தளத்துக்கு செல்ல ?