கண்ணீர் மல்க தனது வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த குருணல் பாண்டியா (காணொளி மற்றும் புகைப்படங்கள்)

கண்ணீர் மல்க தனது வெற்றியை தந்தைக்கு அர்ப்பணித்த குருணல் பாண்டியா

இந்திய அணிக்காக இன்று தனது ஒரு நாள் போட்டி அறிமுகத்தை மேற்கொண்ட குருணல் பாண்டியா இந்திய அணி தள்ளாடிய போது களமிறங்கி அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்று அணியை சரிவில் இருந்து மீட்டார்.

சமீபத்தில் தனது தந்தையை இழந்த குருணல் பாண்டியா இன்று முதல் போட்டியில் அரைசதம் அடித்து அந்த வெற்றியை தனது தந்தைக்கு அர்ப்பணித்ததுடன் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லமால் கண்ணீரில் பதில் சொன்ன குருணல் பாண்டியாவிற்கு ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

குருணல் பாண்டியா மற்றும் அவரது தம்பி ஹர்டிக் பாண்டியாவின் உணர்வுபூர்வமான தருணங்கள்.