கண்ணீர் விட்டு அழுத மெஸ்ஸி, ஓங்கி ஒலித்த கைதட்டல்கள், இறுதி ஊடக சந்திப்பில் நெகிழ்சியான சம்பவங்கள்..! (வீடியோ இணைப்பு)

லியோனல் மெஸ்ஸியும் பார்சிலோனாவும் ஒன்றுக்கொன்று ஒத்த சொற்கள் எனலாம் . இந்த வார தொடக்கத்தில் கிளப் உறுதிப்படுத்தியபடி, மெஸ்ஸி இனி லா லிகா கிளப்பின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியபோது பார்சிலோனா ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கிப் போனார்கள்.

 பார்சிலோனா சார்பில் இறுதி ஊடக சந்திப்பிற்கு இன்று மெஸ்ஸி வந்தபோது, ​​அவர் ஒரு இளைஞனாக இணைந்த ஒரு கிளப்பைப் பிரிந்த உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்கள் வழியே கண்ணீர் பெருக்கெடுத்தது.

மெஸ்ஸி, ஒரு குழந்தையைப் போல அழுதார், அவர் கூட்டத்தில் பேசத் தொடங்குவதற்கு முன்பே கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கைதட்டல்கள் பலமாக ஒலித்தன. அங்கே குழுமி இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று Standing Ovation செய்தார்கள்.

பார்சிலோனா எப்பொழுதும் தனது இல்லமாக இருக்கும் என்று மெஸ்ஸி குறிப்பிட்டார்,

அவர் ஒரு இளைஞனாக எப்படி கிளப்பில் சேர்ந்தார் என்பதை நினைவு கூர்ந்தார். பார்காவுடனான தனது நீண்ட பயணத்தின் மறக்கமுடியாத தருணமாக அவர் தனது பார்சிலோனா அறிமுகத்தையும் தேர்ந்தெடுத்தார்.

பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் இந்த நேரத்தில் மெஸ்ஸியை தங்கள் அணியில் சேர்க்க நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

PSG ஜூன் 2023 வரை உத்தியோகபூர்வ ஒப்பந்தத்தை மெஸ்ஸி மற்றும் அவரது தந்தை ஜார்ஜ் ஆகியோருக்கு அடுத்த மணிநேரங்களில் சமர்ப்பிக்க தயாராக உள்ளது” என்று பரிமாற்ற நிபுணர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

பிஎஸ்ஜியைத் தவிர, பிரீமியர் லீக் கிளப்புகளான மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சி ஆகியவை ஆறு முறை Balloon D’ or வெற்றியாளர் விருது வென்ற மெஸ்ஸிக்கான ஏலங்களை பரிசீலிப்பதாக நம்பப்படுகிறது,

செல்சியின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் நட்சத்திர அர்ஜென்டினாவுடன் ஒரு சந்திப்பைக் கோரியதாகவும் கூறப்படுகிறது.

13 வயதில் சிறுவனாக பார்சிலோனா கழகத்தில் இணைந்த மெஸ்ஸி, 17 ஆண்டுகளாக பார்சிலோனா கழகத்தின் ஏராளமான வெற்றிகளுக்காக தன்னை அர்ப்பணித்தார்.

4 சாம்பியன் லீக் கிண்ணங்கள், 10 லா லிகா கிண்ணங்கள் என்று மெஸ்ஸி Barcelona க்குப் பெற்றுக்கொடுத்த கிண்ணங்கள் எண்ணிலடங்காதவை.

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கிறது, எல்லாவற்றிற்கும் ஒரு இறுதி தருணம் இருக்கிறது.

மெஸ்ஸி பார்சிலோனாவைை விட்டு பிரியும் நிலையும் அப்படித்தான், மானசீகமாக நேசித்த ஒன்றை நாம் விரும்பியோ விரும்பாமலோ விட்டுப் பிரிகையில் அந்த வலியையும் வேதனையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

என்று மெஸ்ஸி கண்கள் வழியே வழிந்த கண்ணீரும் அதைத்தான் நமக்கு எடுத்தியம்புகின்றது.

பார்சிலோனாவை விட்டுப் பிரிந்திருக்கும் மெஸ்ஸி ,அடுத்து எந்த கழகத்தில் இணையப் போகிறார் என்பதுதான் இப்போதைய ரசிகர்கள் எதிர்பாார்ப்பு .

மெஸ்ஸியின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துவோம்.

Messi Messi Messi