கனவாய் இருந்த கிண்ணங்களை நனவாக்கிய நாயகன் – தோனி

கனவாய் இருந்த கிண்ணங்களை நனவாக்கிய நாயகன் – தோனி

Cricket ஒரு மாயம்,

இவனும் இவன் முடியும் cricket விளையாடவா வந்தான் என்று கேட்டாங்க என்று படத்துல காட்டினாங்க,
அதே போல தான் இது என்னப்பா இதெல்லாம் batting ஆ? இதெல்லாம் wicket keeping ஆ? ஒரு style இல்ல, ஒழுங்கான stance இல்ல wicket keepingலயும் சரி battingலயும் சரி இவனெல்லாம் சும்மா வெத்துவேட்டு இவனுக்கு எதுக்கு cricket என்று 2004 ஆம் ஆண்டு விளையாடிய முதல் 3 மேட்சும் சேர்த்து பார்த்தா மொத்தமா 19 runs தான் எல்லாரும் சொன்ன ஒரு வார்த்தை இதற்கு டிராவிட் a keeper செய்யட்டும் புதுசா ஒரு batsman a கொண்டு போகலாம் என்று.

ஆனாலும் dada நம்பிக்கை வீண்போகவில்லை வாய்ப்புகள் வழங்கப்பட்டு தன்னை கீழ் இறக்கி இந்த மோசமாக விளையாடிட்டு இருந்த பொடியனை promote செய்கிறார்.

அந்த நேரம் dada வை திட்டாத வாய்களே இருந்திருக்காது.


அந்த ஒரு match cricket என்றால் இந்த மாதிரி மட்டமான styleum மோசமான சுத்தி சுத்தி அடிச்சு ஆடவும் முடியும் என்ற இந்த உலகத்துக்கு காட்டிய தருணம் அது.

2005 இல் இந்திய வந்த பாகிஸ்தான் அணியை விசாகாபட்னதுல வைச்சு 148 runs அடிச்சு இப்படியும் cricket இருக்கு என்று காட்டி அப்புறம் அடிச்சு பிடிச்சு மேல ஏறி வந்து MSD என்ற ஒரு brand ஆகிச்சு.

 

இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது ஒரு அதிசயம் என்றால் இந்திய அணிக்கு தலைமை ஏற்றது அதிசயத்துக்கும் மேல ஏதும் இருந்தா அப்படி தான் சொல்லணும்.

2007 இல் உலக கிண்ண போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய அணி ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பு வழங்கி இருந்தார்கள் அப்படி ஒரு நிலைமையில் இந்திய அணியின் தலைமை தேடி வருகிறது

அந்த தோல்வி வலி அடங்க முதல் இன்னும் ஓர் உலக்க கிண்ணம், அனுபவ வீரர்கள் எல்லாம் இல்லை அந்த இளைஞர் அணி கிண்ணம் வென்று வர அனைத்து format captain ship பதவியும் தேடி வருது தலைவனாய் சிம்மாசனத்தில் ஏறி இருந்து ஒவ்வொன்றாக cup சேர்க்க படுகிறது .

முடியாது என்ற பலவற்றை முடித்து காட்டி தனக்கும் இதுக்கும் எந்த சமாந்தம் இல்லை என்று நிற்கும் ஒரு நிலை, தோல்வி அடைந்தால் முன்னுக்கும் வெற்றி பெற்றால் பின்னுக்கும் நிக்கும் ஒரு வித்தியாசமான தலைவன்.

தனிப்பட்ட ரீதியில் பெரிய அளவு சாதனை இல்லை என்றாலும் தலைவனாய் செய்ததோ பற்பல.

வாய்ப்பு கிடைக்குமா என்று இருந்த ஒருவன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தலைவன் ஆகினான் கனவாய் இருந்த கோப்பைகள் நனவாக்கிய நாயகன்…

சந்துரு -திருமலை