கனவு மெய்ப்படும் நேரம்- அப்பாவின் அருளாசிகள் கிட்டட்டும்

கனவு மெய்ப்படும் நேரம்- அப்பாவின் அருளாசிகள் கிட்டட்டும்.

ரிக்ஸா ஓட்டிக்கொண்டு, பணக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறியப்பட்ட விளையாட்டில் அதுவும் 135 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில் அதன் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய சாதனை.

அன்றாடம் பிழைப்பு நடத்தி மகனை கிரிக்கெட்டராக்குவது என்பதெல்லாம் சிராஜ் போன்றவர்களை பெற்ற தகப்பன்களுக்கு குதிரைக் கொம்புதான்.

ஆனால் , அதையும் தாண்டி டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த ஒருவனை, இந்தியாவின் தேசிய தேர்வாளர்கள் பார்வையில் படச்செய்து அதுவும் அவுஸ்திரேலியா போன்ற நாட்டுக்கெதிராக அவர்கள் மண்ணிலேயே வைத்து டெஸ்ட் அறிமுகம் மேற்கொள்ள கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய வரம் என்பேன்.

வறுமையை வென்று வரலாறு படைப்பவர்களை நாம் வாழ்த்த வேண்டும் + வணங்க வேண்டும், இவர்கள் தான் எதிர்காலத்துக்கான மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.
அன்றாடம் ரிக்ஸா ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர் தன்னைக் கவனிக்காமல் தன் குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்க ஓடாய் தேய்ந்து மாடாய் உழைத்தவரை கடவுள் வெறும் 53 வயதிலேயே அழைத்து விடுகிறார்.

அதுவும் தன் மகன் அவுஸ்திரேலியாவில் கால்பதித்து ஒரு சில நாட்களிலேயே சிராஜின் தகப்பனார் மரணத்தை தழுவிக் கொள்கின்றார், தகப்பனாரின் இறுதி அஞ்சலி நிகழ்வில்கூட கலந்து கொள்ளமுடியாதவனாக தவித்த மொஹமட் சிராஜ் , நாளை இந்திய சீருடையில் MCG மைதானத்தில் அதிரவைக்க போகிறான்.

அவன் தந்தை விண்ணிலிருந்து அவனை ஆசீர்வதிக்கப்போகிறார்.

ஒரு நெகிழ்ச்சிகரமான சம்பவம்தான், மனதை திடப்படுத்திக் கொண்டு தந்தையின் கனவை நனவாக்க இந்த தனயன் தயாராகிவிட்டார்.

நாங்கள் ஏன் நடராஜன் ,சிராஜ் போன்றோரை கொண்டாட வேண்டும் தெரியுமா, கிரிக்கெட் என்பது மேல்தட்டு வர்க்கத்தின் ஆட்டம் என்று ஒதுங்கிப் போகாமல் தங்கள் லட்சியப் பாதையில் வெற்றித்தடம் பதித்தவர்கள்.

IPL போட்டிகளில் மிகப்பெரும் ட்ரோல் மெட்டிரீயலாக பார்க்கப்பட்ட சிராஜ் , அதையும் கடந்து RCB யின் இந்த ஆண்டுக்கான பேசுபொருளானான்.
அதேபோன்று நாளை ஆரம்பிக்கும் டெஸ்ட் போட்டியிலும் பேசுபொருளாவன் என்று நம்பிக்கையுடன் பிராத்திப்போம்.

இதேபோன்றுதான் கடந்த அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் பாகிஸ்தான் சார்பில் இடம்பிடித்த 16 வயதான பாலகன் நசீம் ஷா, தன் தாயாரை இதேபோன்றொரு அவுஸ்திரேலிய பயணத்தில் பறிகொடுத்தான் அவருக்கும் இதே மாதிரி தாயாருக்கு இறுதி வணக்கம் செலுத்த முடியாது போனது, வலியையும் வேதனைகளையும் மனதில்கொண்டு டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டு ஆசியை மிரட்டினான்.
அதே போன்று சிராஜ் சாதிக்கட்டும் என்று எங்கள் வாழ்த்துக்கள்.

38 முதல்தர போட்டிகளில் 152 விக்கெட்டுக்கள் என்பதெல்லாம் மிகப்பெரிய இந்திய சாதனைதான், சுழல் பந்தின் சொர்க்கபுரியான இந்திய மைதானங்களில் இந்த சாதனை மிகப்பெரியதே.

லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் சிராஜ் ஒரு ட்ரோல் மெட்டிரியலாக இருக்கலாம் ஆனால் FC கிரிக்கெட்டில் சிராஜ் ஒரு ஹீரோ.
#INDvAUS #Siraj

T.Tharaneetharan (Facebook post)
25.12.2020