கபில் தேவின் 41 ஆண்டுகால சாதனையை முறியடிக்கக் காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ..!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நாளை லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணியடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை ஒன்றுக்காக காத்திருக்கிறார்.
இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும் ,சாதனையாளருமான கபில் தேவ் வசமிருக்கும் 41 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் அருமையான வாய்ப்பு பும்ராவுக்கு உள்ளது.
இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 95 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார், கபில் தேவ் முதல் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை இதுவரை தன்வசப்படுத்தியிருக்கும் கபில் தேவின் சாதனையை, நாளை (25) இடம்பெறப்போகும் போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவாராயின் முறியடிக்கும் வாய்ப்பு கிட்டும்.
3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமேதான் பும்ரா சொந்த மண்ணில் விளையாடி இருக்கிறார், மற்றைய அனைத்துப் போட்டிகளும் வெளிநாட்டு மண்ணி ல் விளையாடப்படவை என்பதும் கவனிக்கத்தக்கது.