கரீபியன் பிரீமியர் லீக்கில் எதிர்ப்பை வெளியிட பொல்லார்ட் கையில் எடுத்த புதிய உத்தி- வைரலாகும் வீடியோ ..!
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரீபயன் பிரீமியர் லீக் போட்டி தொடரின் சென் லூசியா மற்றும் ரின்பாகோ நைட் ரைடேர்ஸ் அணிகளுக்கிடையிலான ஒன்பதாவது போட்டியில் ஒரு வித்தியாசமான நிகழ்வு அரங்கேறியது.
இந்த போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது 19 வது ஓவரை வீசிய வஹாப் ரியாஸ் மொத்தமாக பத்து பந்துகளை வீசினார், ஏற்கனவே அவர் வீசிய 4 பந்துகள் நடுவரால் wide ஆக அறிவிக்கப்பட்டன, அந்த ஓவரில் இன்னும் ஒரு பந்தை வீசிய போது அது முற்று முழுதாகவே Wide ball ஆக அமையப் பெற்றது.
ஆனாலும் நடுவர் அதனை அகலப்பந்தாக (Wide) அறிவிக்கவில்லை, ஆகவே அணித்தலைவர் பொல்லார்ட் No strikers end இலிருந்து 20 யார் தூரத்தே விலத்திச்சென்று தனது எதிர்ப்பை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி இருக்கிறது. காணொளி இணைப்பு ???
Kieron Pollard ? pic.twitter.com/GPsoAC2WEm
— Kart Sanaik (@KartikS25864857) September 1, 2021