கறுப்புப் பட்டியுடன் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்- காரணம் ஏன் என ECB தகவல்..!

கறுப்புப் பட்டியுடன் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள்- காரணம் ஏன் என ECB தகவல்..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ஹெடிங்கிலே லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் இன்று கறுப்பு கலர் ஆர்ம் பேண்ட் (Arm Band) அணிந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன .

ரசிகர்கள் அதிகமானவர்களுக்கு இங்கிலாந்து வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடுகின்றனர் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

 

இதனடிப்படையில் இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை அதற்கான விளக்கத்தை தருகிறது .

நேற்றைய நாளில் 86 வயதான முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் Ted Bexter மரணத்தை தழுவினார்,  இதற்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவே இங்கிலாந்து வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

86 வயதான Ted Baxter 62டெஸ்ட் போட்டிகளில் 4500 ஓட்டங்களை 47 .89 என்னும் சராசரியில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.