கலவரத்தில் முடிந்த பிரேசில், ஆர்ஜென்டினா கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி- கவலையில் ரசிகர்கள்..!

கலவரத்தில் முடிந்த பிரேசில் ஆர்ஜென்டினா கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி- கவலையில் ரசிகர்கள்..!

அடுத்த ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இடம்பெற்றுவரும் தகுதி காண் போட்டிகளில், இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் அமெரிக்க கண்ட நாடுகளான பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளது போட்டி எதிர்பார்க்கப்பட்டது.

பிரேசில் (நெய்மர்), ஆர்ஜென்டினா (மெஸ்ஸி) அணியில் இரண்டு மிகப் பெரும் கால்பந்து நட்சத்திரங்கள் விளையாடுகின்ற காரணத்தாலும், கால்பந்தில் கலக்கும் இருபெரும் நாடுகள் என்ற காரணத்தாலும் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆயினும் போட்டி தொடங்கி ஆறாவது நிமிடத்தில் மிகப்பெரிய கலவரத்துக்கு மத்தியில் ரசிகர்களுக்கு கவலைதரக்கூடிய விதத்தில் போட்டி கைவிடப்படுவதாக ,நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டமைை குறிப்பிடத்தக்கது

உலகின் பெரும் தொற்றாக பார்க்கப்படும் கொரோனா தொற்று காரணமாக உலகின் மிக சில நாடுகளிலிருந்து, பிரேசில் நாட்டுக்கு உள்நுழைப்பவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசின் சுகாதார சட்டம் இருக்கிறது.

இப்படி இருக்க, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் கடந்தவாரம் பங்கேற்ற 4 வீீரர்கள் ஆர்ஜென்டினா அணியில் விளையாடியமையே இந்த கலவரத்திற்கான காரணமாக அமைந்தது.

4 வீரர்களும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து நாட்டுக்குள் நுழைந்து உள்ளதாக சுகாதாரத் தரப்பு குற்றம் சாட்டி, போலீசாரின் உதவியோடு அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதன் காரணத்தாலேயே போட்டி மிகப்பெரிய கலவர நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில், பிரேசிலின் சுகாதார அதிகாரியான அன்விசாவின் அதிகாரிகள் மைதானத்தை முற்றுகையிட்டனர்,

போலீஸ் அதிகாரிகள் உடன் நான்கு வீரர்கள் களத்தில் இருந்து தடுத்து நிறுத்தப்படும் வரை உலகக் கோப்பை தகுதிகாண் போட்டியை நிறுத்துமாறு கூறினர்.

எமிலியானோ புவேண்டியா, எமிலியானோ மார்டினெஸ், ஜியோவானி லோ செல்சோ மற்றும் கிறிஸ்டியன் ரோமெரோ ஆகியோரே சிக்கலுக்குரிய 4 வீரர்கள்.

இருப்பினும், நான்கு வீரர்களும் அவர்கள் இங்கிலாந்தில் இருப்பதாக அறிவிக்கவில்லை, த மெயிலின் தகவல்படி, பிரேசிலுக்குள் நுழைவதற்கு முன்பு வீரர்கள் உண்மையில் ஆர்ஜென்டினா மற்றும் வெனிசுலாவில் இருந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த வார இறுதியில் இங்கிலீஸ் பிரீமியர் லீக் சுற்றில் அவர்கள் அனைவரும் அந்தந்த கிளப்புகளுக்கான கடைசி போட்டியில் தத்தமது அணிகளில் ஈடுபட்டிருந்தாகவே குற்றம்சாட்டப்படுகிறது.

“பிரேசிலின் சுகாதார கட்டுப்பாட்டாளர் அன்விசா ஒரு தகவலை கூறினார்.

“விமானம் குவாருல்ஹோஸில் (சாவ் பாலோ) தரையிறங்கியது. கடந்த 14 நாட்களாக தடைசெய்யப்பட்ட நான்கு நாடுகளில் எந்த நாட்டிலும் தாங்கள் இல்லை என்று குறித்த வீரர்கள் அறிவித்தனர்.

இந்த வீரர்கள் அளித்ததாக கூறப்படும் தவறான தகவல் குறித்து அன்விசா எச்சரிக்கப்பட்டார். இதுவே சிக்கலின் அடிப்படகயாக அமைந்த்து.

இதற்கிடையில், பிரேசில் அணியின் இடம்பெற்றிருந்த லிவர்பூல் இரட்டையர்கள் ஃபேபின்ஹோ மற்றும் அலிசன், மற்றும் மான்செஸ்டர் ஜோடி எடர்சன் மற்றும் கேப்ரியல் ஜீசஸ், செல்சியின் தியாகோ சில்வா உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் இல்லாமல் பிரேசில் போட்டியை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Christian Romero