களத்துக்கு திரும்ப தயாராகும் அவிஷ்கா பெர்னாண்டோ – தலைமை தேர்வாளர் தகவல்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ விரைவில் அணிக்கு திரும்பும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பிரமோதய விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான தொடரில் உடல்தகுதி சோதனையில் தகுதிபெற தவறிய நிலையில், அவிஷ்கா பெர்னாண்டோ அணியில் இணைக்கப்பட்டிருக்கவில்லை,

ஆயினும் அடுத்தவாரம் மீண்டும் உடல் தகுதி சோதனையில் பங்கேற்று தேறுவாராக இருந்தால், இங்கிலாந்துடனான தொடருக்கு இவரை இணைக்கமுடியும் என்று பிரமோதய விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.