கவலைப்படாதீர்கள் இந்தியாவால் மீண்டு வரமுடியும் நம்பிக்கை வெளியிடும் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான்..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மைதானத்தில் இடம்பெற்றுவரும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களுக்குள் இந்தியா ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தது.

நியூசிலாந்து பலமான ஆரம்பத்தை கொண்டு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 101 ஓட்டங்கள் பெற்ற நிலையில் நேற்று ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இது தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ரமீஸ் ராஜா தன்னுடைய யூடியூப் தளத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

நிச்சயமாக வலுவான அணியாக இந்தியா மீண்டு வர அதிக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன, கோலி தலைமையிலான இந்திய அணியால் நிச்சயமாக முடியும்.

விரிவாக விக்கெட்டுகளை கைப்பற்றி, நியூஸிலாந்து அணி இந்தியாவை காட்டிலும் அதிக ஓட்டங்கள் பெறுவதை தடுத்து, விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் இந்தியா போட்டியில் மீண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் என்ற நம்பிக்கை கதையை ரமீஸ் ராஜா தெரிவித்திருக்கிறார்.

காத்திருப்போம்.