? உள்ளே ?
IPL எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கண்டிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், BCCI செய்திக்குறிப்பில் குற்றத்தின் குறிப்பிட்ட தன்மையை குறிப்பிடவில்லை.
“ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை கார்த்திக் ஒப்புக்கொண்டார் மற்றும் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
நடத்தை விதிகளின் லெவல் 1 மீறல்களுக்கு, மேட்ச் ரெஃப்ரியின் முடிவே இறுதியானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் RCB தோற்கடித்தது.
அதிரடி நிகழ்த்திய கார்த்திக் 37 ரன்கள் விளாசினார், இன்று (27) இரவு முக்கிய குவாலிபயர் ஆட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
?: ஐ.பி.எல்
YouTube காணொளிகளைப் பாருங்கள் ?