கார் விபத்தில் சிக்கினார் திரிமான்ன..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்ன வாகன விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் திரப்பனே பகுதியில் அவர் பயணித்த கார் லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.