கார வெற்றியை பதிவு செய்தது பார்சிலோனா!! தடுமாற்றத்தில் ரியல்மாட்ரிட்

டானி ஆல்வ்ஸ் பார்சிலோனாவுக்காக தனது 400வது ஆட்டத்தை இன்று விளையாடினார்.

ரியல் மாட்ரிட் அணியுடனான இன்றைய பரபரப்பான எல் கிளாசிகோ போட்டியில் விளையாடியதன் மூலம் இந்த சாதனையை எட்டினார் .

பார்சிலோனாவுக்காக அதிக முறை விளையாடிய 16வது வீரராகவும், லியோ மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக கிளப்பில் அதிக முறை விளையாடிய 2வது வெளிநாட்டு வீரராகவும் ஆகினார்.

✅253 லா லிகா
✅82 UCL
✅45 கோபா டெல் ரே
✅12 ஸ்பானிஷ் கோப்பை
✅5 FIFA கிளப் உலகக் கோப்பை
✅3 UEFA சூப்பர் கோப்பை

 

இன்றைய போட்டியில் பார்சிலோனா 4-0 என அபார வெற்றி பெற்றது.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் எல் கிளாசிகோவை பார்சிலோனா கைப்பற்றி உள்ளதுடன், லா லிகா தொடரின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது