காற்பந்து உலகின் முன்னணி மூன்று நட்சத்திரங்கள் இணைந்த சாம்பியன் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சி…!

காற்பந்து உலகின் முன்னணி மூன்று நட்சத்திரங்கள் இணைந்த சாம்பியன் லீக் ஆட்டத்தில் மெஸ்ஸியின் அணிக்கு அதிர்ச்சி…!

கால்பந்து உலகில். முன்னணி தொடரான சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் 2-வது நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வந்தன.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த PSG அணி விளையாடிய போட்டி இடம்பெற்றது .

பிரான்சின் பிரபலமான பாரிஸ் செண்ட் ஜெர்மனி இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் நாட்டின் கிளப் ப்ரூஜ் அணியுடனான போட்டியில் பங்கேற்றது.

கால்பந்து உலகின் மிகப்பெரிய  முன்னணி நட்சத்திரங்களான நெய்மர், மெஸ்ஸி, கைலியன் ம்பாப்வே ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இணைந்து ஒரே போட்டியில் விளையாடியும்கூட பெல்ஜியம் நாட்டின் அவ்வளவு பிரபலமில்லாத  கிளப் ப்ரூஜ் அணியுடனான போட்டியில் இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியாது போனது.

ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் PSG அணிக்காக ஹெர்ராரா ஒரு கோலில் பெற்றுக்கொண்டார், இருப்பினும் 12 நிமிடங்கள் மட்டும் தான் PSG அணியால் முன்னிலை வகிக்க முடிந்தது.

25 நிமிடத்தில் மீண்டும் கிளப் ப்ரூஜ் அணியின் வானகேன் வீீரர் பெற்றுக்கொண்ட கோலால் முதல்பாதி் ஆட்டம் 1-1 என நிறைவுக்கு வந்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் கோல் பெறுவதற்கான முயற்சிகளை PSG மேற்கொண்டாலும் வெற்றியளிக்கவில்லை, இறுதியில் முழு புள்ளிகளையும் பெற்றுக்கொண்டு போட்டியில் வெற்றி கொள்ள முடியாத அவல நிலைக்கு PSG தள்ளப்பட்டது, போட்டி 1-1 என  நிறைைவுபெற்றது.

சாம்பியன் லீக் கால்பந்து போட்டி தொடரின் முதல் போட்டியில் பிஎஸ்ஜி கிட்டத்தட்ட அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது எனவே கூறலாம்.

பிஎஸ்ஜி முதன்முதலில் கிளப் ப்ரூஜில் தங்கள் நட்சத்திர மூவருடன் போட்டியை தொடங்கியும் பெல்ஜிய அணி அவர்களின் தொடக்க சாம்பியன்ஸ் லீக் குரூப் ஏ விளையாட்டில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

முழு நேரம்

கிளப் ப்ரூஜ் 1 – 1 PSG

⚽ வானகேன் 27 ‘⚽ ஹெர்ராரா 15’