காலத்திற்கும் நின்று பேசப்போகும் Boxing Day அறிமுகங்கள்

1.ஹசரங்க டீ சில்வா (வணிந்து ஹசரங்க ) -இலங்கை
வயது 23
இலங்கை கிரிக்கெட்டின் அண்மைக்கால கண்டுபிடிப்பு, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் கலக்கி கொண்டிருந்த ஹசரங்ககவை டெஸ்ட் போட்டிகளுக்குள்ளும் கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தை உண்மையில் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
இந்தியாவில் 36 வயதான சஹாவுக்காக பான்டை வெளியில் உட்கார வைத்ததை போன்றல்லாது, ஸ்ரீலங்கா கிரிக்கெட் துணிந்து வெளிநாட்டில் அறிமுகம் கொடுக்க ஹசரங்கவைக் கொண்டுவந்திருக்கிறது. 38 வயதான டில்ருவான் பெரேராவுக்கு பதிலாக அணிக்குள் எடுத்த தீர்மானம் எதிர்காலம் நோக்கியது.
2020 சஹாவுக்கு விடைகொடுத்ததை போன்று, நாமும் டில்ருவானுக்கு விடைகொடுக்கலாம்.
ஆனால் கடந்த முறை தென் ஆப்பிரிக்காவை அவர்கள் மண்ணிலேயே வைத்து அள்ளுவதற்கு காரணமான எம்புல்தேனிய வெளியில் இருப்பது வேதனைதான்.
ஆனாலும் ஒரு துணிகர முடிவு, அடுத்த தலைமுறை வீரரான ஹசரங்கவை அனைத்துவகைப் போட்டிகளுக்குமான ஸ்டார் ஆக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த தீர்மானதுக்காக தேர்வாளர்களைப் பாராட்டிடலாம்.
ஹசரங்க ஒரு பெறுமதியான சகலதுறை வீரர் என்பதும் இன்னும் பலமே .
2. மொஹமட் சிராஜ்- இந்தியா
வயது 26
பண போதையில், புகழ் போதையில் இருந்த வர்க்கத்தில் இருந்து ஒருவன் வந்து சாதிப்பதற்கும் வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து போராடிப் போராடி ஜெயித்து வெளியில் ஒருவன் வருவான் பாருங்கள் அவனை காலம்முழுக்க நாம் கொண்டாட வேண்டும்.
சிராஜ் அப்படிப்பட்டவர்.
நேற்று சொன்னதுபோல் சோர்ட் போர்மட்டிலும், IPL யிலும் சிராஜ் ஒரு ட்ரோல் மெட்டிரியலாக இருந்தாலும் பாரம்பரிய கிரிக்கெட்டில் சிராஜ் பக்கா திறமைசாலி.
உமேஷ் யாதவ் இப்போது 4 வது ஆஸ்திரேலிய பயணத்தில் பந்துவீசுகிறார், ஆனால் உமேஷ் கற்றுக்கொண்டதைவிட ஒற்றைப்பயணத்தில் சிராஜ் கற்றுக்கொண்டது ஏராளம் என்பேன்.
இஷாந்த்,சாமி இல்லாத இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கொஞ்சம் பலவீனப்பட்டுவிடுமோ என்று எண்ண இந்த சிராஜ் நம்பிக்கையூட்டிவிட்டான்.
கடந்தமுறை அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் ஸ்மித் , வோர்னர் இல்லை என்று அவுஸ்திரேலியர்களின் மெண்டல் கதைகளை போல் இம்முறை இந்தியாவில் கோஹ்லி,இஷாந்த், ஷமி இல்லை என்று இந்தியாவும் நொண்டிச் சாட்டு சொல்லக்கூடாது என்பது என் கருத்து,
அதற்கான நம்பிக்கையை இன்றைய போட்டியில் சிராஜ் அதிகம் நமக்கு ஊட்டிவிட்டார்.
3. சுப்மான் கில்.-இந்தியா (வயது 21)
இந்தியாவின் கிரிக்கெட் எதிர்காலம்.
வயது 21 மட்டும்தான்.
ஷொட் செலக்சன், கான்பிடென்ட் லெவல் எல்லாம் பக்கா, அவுஸ்திரேலியாவில் வைத்து ஆடிய இரு பயிற்சிப் போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட ஓட்டங்கள் 0, 29, 43, 65 ஓட்டங்களாக இருந்தாலும் அற்புதமான ஆரம்பம் என்று மெச்சலாம்.
ரோஹித், ராகுல் என்று போட்டிபோடும் ஓப்பேனிங் ஸ்லோட்டை எப்படி தனக்கானதாக்க போகிறான் என்பதிலேதான் வெற்றி தங்கியிருக்கிறது.
ஆனாலும் எனக்கு இவன் மீது அதீத நம்பிக்கை.
4. லுதோ சிபம்லா- தென் ஆப்பிரிக்கா
வயது 22
135 + வேகம் இருக்கிறது, நிட்டினி மற்றும் ரபாடா கலந்த கலவையாக ஏதோ ஒன்று தெரிகின்றது, பெரிதாக இதுவரை கண்ணில் படவில்லை, ஆனாலும் இன்றைய போட்டியைப் பார்க்கின்றபோது பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று நம்பலாம்.
2020 Boxing Day டெஸ்ட் போட்டிகள் எமக்கு மகத்தான 4 புதுமுகங்களைக் கொடுத்திருக்கிறது. காலத்துக்கும் நின்று பேச வைக்கும் அறிமுகங்களாக யாரெல்லாம் இருப்பார்கள் என்று காத்திருந்து ரசிப்போம்.
*சிராஜுக்கு முதல் டெஸ்ட் விக்கெட் கிடைக்க இன்னுமொரு அறிமுகம் கில் காரணமானதை போன்று, சிபம்லாவின் முதல் டெஸ்ட் விக்கெட் அறிமுக வீரர் ஹசரங்க என்பதும் சுவாரஸ்யமே
.