காலிறுதிக்குள் நுழைந்தார் எம்மா ரடுகானு!

ருமேனியாவில் நடைபெறும் டிரேன்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, யு.எஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து) தகுதி பெற்றார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ருமேனியாவின் அனா போக்தனுடன் (28 வயது) நேற்று மோதிய ரடுகானு (18 வயது) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.

காலிறுதியில் உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக்குடன் (19 வயது) ரடுகானு மோதுகிறார்.

Previous articleஃபார்முக்கு திரும்பினார் வோர்னர்- இலங்கையின் தொடர் வெற்றிப் பயணத்துக்கு முடிவுகட்டியது அவுஸ்ரேலியா..!
Next articleMatthew HAYDEN எனும் திறமையாளன்!