முன்சிப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன், சர்வதேச கழகம் ஒன்றுக்கு விளையாட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் இலட்சியமாக கொண்ட முன்சிப் தற்போது இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளான்.
பிரேசிலின் கடற்கரை கிராமத்தில், காற்றால் வீங்கிய பழைய கால்பந்து ஒன்றை காலில் செருப்பு இல்லாமல் உதைத்து விளையாடிய ஏழை சிறுவன்தான் பெலே.
அவன் பிறந்த நிலம் வறுமையால் காய்ந்திருந்தாலும், அவன் மனம் பந்தின் சுழலில் உலகையே சுற்றிக் காட்டியது. உலகக் கோப்பையில் மைதானம் முழுதும் அவனது கால்களின் ஓசை ஒலித்தபோது, உலகம் உணர்ந்தது
“ஒரு சிறுவன் பந்தை தட்டும் ஒலி கூட வரலாறு எழுதலாம்” என்று.
அதே ஒலி, உந்துதல், அந்த வரலாற்றின் பிரதிசை இன்று முன்சிப் வடிவில் நான் காண்கிறேன்.
ஒரு இலக்கை கொண்டு, ஓடிக் கொண்டிருக்கிறான், அதற்காக முயற்சிகிறான், ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி காண்கிறான்.
அவன் உதைபந்தின் வழியாக சொல்லப்படாத கனவுகளைக் கேட்க வைக்கிறான், “ஒரு கிராமப்பந்தயமும் ஒரு நாள் தேசியக் கீதத்தின் தாளத்தில் ஒலிக்கலாம்” என்று.
சிறுவயதில் மற்றவர்கள் சைக்கிள் டயர் உருட்டி விளையாடிய வேளையில்,
அவன் மட்டும் பூட்ஸ் அணிந்து, காற்றில்லாத பந்துடன் அலிகார் பாடசாலை மைதானத்தில் பயிற்சி செய்தான்.
அந்த பந்தில் தான் அவனது கனவுகள் உருண்டன, அந்த மைதானமே அவனது முதல் வகுப்பு.
13 வயதில் YSSC கழகத்தின் முதல் 11 வீரர்களில் அவன் இடம் பெற்றது ஒரு சாதாரண சம்பவம் அல்ல,
அது அவனின் விடாமுயற்சிக்கான முத்திரை.
அந்த வயதில் சிலர் விளையாட்டை கற்றுக்கொள்வார்கள்,
அவன் விளையாட்டில் வழிகாட்டினான்.
அலிகார் தேசிய பாடசாலை அணி Ball Blaster சுற்று தொடரில் சாம்பியனானது.
அந்த வெற்றியின் மூலம் கிழக்கின் உதைப்பந்து பற்றி தேசியத்தில் ஒரு செய்தி சொல்லப்பட்டது.
முன்சிப் ஒவ்வொரு ஆட்டத்திலும் தனித்துவம் காட்டுவான்.
அவனது ரிப்ளிங் திறமை, டிபென்ட்களை முந்தி செல்லும் speed, பந்தை கையாளும் ball control, துல்லியமான passing, திடீரென திறக்கும் vision மற்றும் நீண்ட தூரத்திலிருந்தும் கோல் அடிக்கும் shooting power என்பன சக வீரர்களிலிருந்து முன்சியை தனித்துவமாக காட்டும்.
Ball Blaster தொடரில் Hameed Al Hussainiya பாடசாலைக்கு எதிரான போட்டியில் அவன் இந்த திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினான்.
35 மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த freekick வலையில் சுழற்சி பெற்று வலைக்குள் விழுந்தது.
இந்த கோல் ரொனால்டோ 2008-ல் Portsmouthக்கு எதிராக அடித்த freekick நினைவூட்டியது.
அந்த freekick, அவனது தலைமை, நம்பிக்கை மற்றும் தேசிய அளவிலான கனவின் தொடக்கம்.
அந்த நாள் மைதானத்தில் இருந்த அனைவரும் கோலின் தாக்கத்தை நேரடியாக அனுபவித்தனர்.
அவன் பின்னர் இலங்கை 19 வயது தேசிய அணியில் தலைவராக,
SAFF U21 Tournament மற்றும் Asia Cup Under-21 Qualified Rounds போட்டிகளில்
தனது தலைமைத் திறனையும், ஆட்டப் புலனையும் வெளிப்படுத்தினான்.
தற்போது இலங்கை தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளான், அவனது இலட்சிய கனவுகளின் வாயில்கள் மெல்ல மெல்ல திறப்பதாக உணர்கிறேன்.
சப்ரகமுக பல்கலைக்கழகத்துக்கு Sports management துறைக்கு தெரிவாகியுள்ள முன்சி, தற்போது வெளிநாட்டு வீரர்களை பலரை தன்னகத்தே கொண்டு முன்னேரி செல்லும் இலங்கை உதைப்பந்தாட்ட அணியிலும் தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்து, தனக்கான அடையாளத்தை பதிக்க வேண்டும் என வாழ்த்துக்கள்.
#Munsi❤️
✍️ Mohamed Mufaz







