கால்பந்து களத்திற்கு திரும்பிய தல தோனி, ரன்வீர் சிங் கோடு போட்டியில் பங்கேற்றார்..! (வீடியோ இணைப்பு)

கால்பந்து களத்திற்கு திரும்பிய தல தோனி, ரன்வீர் சிங் கோடு போட்டியில் பங்கேற்றார்..! (வீடியோ இணைப்பு)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும்  அணித் தலைவருமான மகேந்திர சிங் தோனி தற்சமயம் ஓய்வில் இருந்து வருகிறார்.

தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகின்றார்.

ஐபிஎல் போட்டிகள் எதுவும் இந்த காலகட்டத்தில் இல்லாத நிலையில், ஓய்வில் இருக்கும் தோனி நேற்று மும்பையில் கால்பந்து போட்டியில் பங்கேற்று எல்லோரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார் .

மும்பையில் இருக்கின்ற All Stars கால்பந்தாட்ட கழகம் ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வமான பயிற்சி போட்டி ஒன்றில் தோனி பங்கேற்றிருக்கிறார்.

பிரபலமான பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் ,இந்திய கிரிக்கெட் வீரர் சிரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பலரும் இந்த போட்டியில் பங்கேற்று இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கால்பந்து களத்தில் கோல் காப்பாளராக இருந்த தோனியை அவருடைய இளமைக் கால பயிற்சியாளர் கிரிக்கெட் பக்கம் திருப்பி அனுப்பினார்.

இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபலமான கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும் கால்பந்து மீதான காதல் இன்றும் இருக்கிறது என்பதை நேற்றைய பயிற்சிப் போட்டி காட்டுகிறது.

புகைப்படங்களும், வீடியோவும் இணைப்பு ????