கால்பந்து களத்தில் மயங்கி விழுந்த கால்பந்து நட்சத்திரம்- திடீரென விரைந்த அம்பியூலன்ஸ்..!
துருக்கியில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கால்பந்து போட்டியில் பங்கெடுத்த வீரர் ஒருவர் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மைதானத்தில் மயங்கி விழுந்த வீரரை உடனடியாக ஆம்புலன்ஸ் கொஆவு வண்டி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு குறித்த வீர்ர் ஓரளவு ஆரோக்கியத்தோடு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
31 வயதான Besiktas கால்பந்து கழக வீர்ரான Fabrice Nsakala, மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது 71 வது நிமிடத்தில் திடீரென உடல்நலக் குறைவால் மயங்கி வீழ்ந்தார்.
கடந்த மாதம் இடம்பெற்ற யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் போது டென்மார்க் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் இதேபோன்று மைதானத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்த சம்பவம் பதிவானது.
இதனைத் தொடர்ந்து துருக்கியில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் இன்னும் ஒரு கால்பந்து வீரர் இவ்வாறு மைதானத்தில் மயங்கி விழுந்த சோகமான சம்பவம் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தான் ஆரோக்கியத்தோடு இருப்பதாக பப்ரிஸ் நசகாலா குறிப்பிட்டு உள்ளமை கவனிக்கத்தக்கது.
71 நிமிடம் சென்று கொண்டிருந்த போது இந்த துர்ப்பாக்கிய சம்பவம் பதிவானது, இதனால் கோல்கள் எதுவும் போடப்படாத நிலையில் போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.