கால்பந்து களத்துக்கு திடீர் ஓய்வை அறிவித்த பிரபல ஆர்ஜன்டீனா வீரர்..!

கால்பந்து களத்துக்கு திடீர் ஓய்வை அறிவித்த பிரபல ஆர்ஜன்டீனா வீரர்..!

கால்பந்து உலகின் கலக்கல் நாயகனான ஆர்ஜன்டீனாவின் பிரபல வீரரும், தற்போதைய பார்சிலோனா அணியின் நட்சத்திரமுமான செர்ஜியோ அகியூரோ, 33 வது வயதில் கால்பந்து களத்திலிருந்து விடைபெறுவதாக கவலையுடன் அறிவித்துள்ளார்.

அக்டோபர் 30 அன்று அலவேஸுடனான பார்சிலோனாவின் போட்டி 1-1 என சமநிலையானபோது 33 வயதான செர்ஜியோ அகியூரோ, மார்புப் பிரச்சினைகள் மற்றும் சுவாசக் கஷ்டங்களை அனுபவித்தார் மற்றும் இருதய பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மூன்று மாதங்களுக்கு போட்டிகளில் விளையாடாது ஓய்வில் வெளியே இருப்பார் என்றும், “நோயறிதல் மற்றும் சிகிச்சை செயல்முறையை” மேற்கொள்வார் என்றும் கிளப் அப்போது கூறியது, ஆனால் அந்த காலம் முடிவதற்குள் செர்ஜியோ அகியூரோ திடீர் ஓய்வு முடிவுக்குள் தள்ளப்பட்டுள்ளமை ரசிகர்களுக்கு கவலையான செய்தியே.

” நான் மிகவும் பெருமைப்படுகிறேன் – மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று செர்ஜியோ அகுயூரோ கூறினார். “எனக்கு ஐந்து வயதிலிருந்தே கால்பந்து விளையாடுவதைப் பற்றி நான் எப்போதும் கனவு கண்டேன். டாப் பிரிவில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு; நான் ஐரோப்பாவுக்கு வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, அதனால் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

அவரது பிரியாவிடை நிகழ்வில் சிட்டி மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், மேலும் அவரது கிளப்களில் ஒன்றான பார்சிலோனாவின் தலைவர் ஜோன் லபோர்டாவின் அருகில் அமர்ந்திருந்தார் – அவரது தொழில் வாழ்க்கையின் தருணங்களின் வீடியோ பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது. இங்கிலாந்து கழகமான மான்செஸ்டர் சிட்டி அணியின் முகாமையாளர் பெப் கார்டியோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“நான் என் தலையை உயர்த்திக் கொண்டு செல்கிறேன் – மகிழ்ச்சி,” அகுயூரோ கூறினார். “எனக்கு என்ன காத்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நிறைய பேர் என்னை நேசிக்கிறார்கள் மற்றும் எனக்கான சிறந்ததை விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும்.”

 

2011-2021 வரை 390 போட்டிகளில் விளையாடி 260 கோல்களை அடித்த மான்சேஸ்டெர் சிட்டியின் சாதனை வீரரான அகுயூரோ அட்லெடிகோவுக்காகவும் விளையாடியுள்ளார், மெஸ்ஸி உள்ளிட்ட பிரபல வீரர்களுடன் இணைத்து ஆர்ஜன்டீனா அணிக்காக 101 சர்வதேச போட்டிகளில் 42 கோல்களை அடித்தார், மேலும் 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியமை , இந்த ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் வீரராகவும் இவர் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

? 786 போட்டிகள்
⚽️ 426 கோல்கள்
? 118 கோல்களுக்கான உதவிகள்

தனது சகாவான மெஸ்ஸியின் தூண்டுதலினால் இங்கிலாந்தின் மான்செஸ்டர் கழகத்திலிருந்து பார்சிலோனா கழகத்துக்கு செர்ஜியோ இந்த ஆண்டு திரும்பியிருந்தார், ஆனால் மெஸ்ஸியோ திடீரென பார்சிலோனா களகத்திலிருந்து மாற்றலாகி PSG கழகத்துடன் இணைத்திருந்தார்.

ஆகமொத்தத்தில் செர்ஜியோ எதிர்பார்த்திருந்த எதுவும் இந்த ஆண்டு நடக்காமலேயே, இருதய பிரச்னை காரணமாக திடீர் ஓய்வு முடிவுவரை கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.