கால்பந்து: நடப்பு பருவகால போட்டிகளின் இறுதி கட்டம்: லா லிகா பட்டம் யாருக்கு? ரொனால்டோவின் நிலை என்ன?
கால்பந்தின் 2020/21 பருவகால போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டிகளில் முக்கிய அணிகளின் நிலை, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற மற்றும் தகுதி பெற தவறிய அணிகள் மற்றும் ஐரோப்பிய சூப்பர் லீக் போட்டிகளின் நடைமுறை சாத்தியம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
பிரிமியர் லீக் கால்பந்து தொடர். (Premier League)
இங்கிலாந்து பிராந்திய அணிகளின் கால்பந்து லீக் தொடரான பிரிமியர் லீக் இல் Manchester City அணி தொடர் ஆதிக்கத்துடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது.
அனைத்து அணிகளும் 35 போட்டிகள் விளையாடிய நிலையில் இவ்வாரம் 36 ஆவது போட்டி வாரம் நடை பெறுகிறது. 35 போட்டிகளின் முடிவிலேயே Manchester City Premier League பட்டத்தை தட்டி சென்றுள்ளது.
கடந்த 4 வருடங்களில் Manchester City இன் 3 ஆவது Premier League பட்டம் இதுவாகும். அத்துடன் Manchester City இந்த பருவகாலத்துக்கான EFL கிண்ணத்தையும் தொடர்ந்து 4 ஆவது முறையாக வெற்றி கொண்டது. இருப்பினும் FA கிண்ண அரைஇறுதி போட்டியில் Chelsea அணியுடன் தோல்வியுற்று வெளியேறி இருந்தது. தொடர்ந்து பல கிண்ணங்களை வென்று வரும் Pep Guardialo இன் Manchester City ஐரோப்பாவின் உயர் பட்டமாக கருதப்படும் UEFA சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை மட்டும் வெற்றி கொள்ள தவறி வந்தது. இம்முறை அதற்கான வாய்ப்பை Manchester City பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள Manchester City இறுதி போட்டியில் Chelsea அணியினை எதிர் கொள்கிறது.
Premier League புள்ளி பட்டியலில் தற்சமயம் Manchester United 2 ஆம் இடத்திலும் Leicester, Chelsea, Liverpool, Tottenham, West Ham, Everton அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இவற்றில் Manchester United அடுத்த பருவகால Champions League போட்டிகளுக்கான தகுதியை உறுதி செய்துள்ளது. இன்னும் 2 சுற்று போட்டிகள் மீதமுள்ள நிலையில் எஞ்சிய 2 இடங்களிற்கான தகுதிக்காக 6 அணிகள் போட்டியிடுகின்றன. இம்முறை Champions League கிண்ணத்தை Manchester City அல்லது Chelsea அணியும் Europa League கிண்ணத்தை Manchester United அணியும் வெல்லும் வாய்ப்பு உள்ளதால் Premier League தொடரில் இருந்து 5 அணிகள் அடுத்த பருவகால Champions League தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் Premier League Big Six இல் உள்ள Arsenal தற்சமயம் 9 ஆவது இடத்தில் உள்ளது.
லா லிகா (La Liga)
La Liga தொடர் இம்முறை சாம்பியன் அணியை தெரிவு செய்ய இறுதி வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
Atletico Madrid, Real Madrid மற்றும் Barcelona அணிகள் தமக்கிடையில் கிண்ணம் வெல்லும் வாய்ப்பை மாற்றி மாற்றி பகிர்ந்திருந்திருந்தாலும் 36 போட்டிகளின் முடிவில் Atletico Madrid முதலிடத்திலும் Real Madrid மற்றும் Barcelona அடுத்த இடங்களிலும் உள்ளன.
Champions League தகுதியை பொறுத்த வரையில் Sevilla அணியுடன் இம்மூன்று அணிகளும் தகுதியை உறுதி செய்துள்ளன.
Serie A(Italy)
இத்தாலியின் Serie A தொடரை பொறுத்த வரை Juventus அணியின் 9 வருட ஆதிக்கத்தை முறியடித்து கிண்ணம் வென்றுள்ளது Inter Milan. அத்துடன் 9 வருட தொடர் சாம்பியன்களான Juventus இம்முறை 5 ஆவது இடத்தில் உள்ளது. 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் Ronaldo இன் Juventus அடுத்த பருவகால Champions League தகுதியை இழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது.
Bundesliga(Germany)
Bundesliga தொடரில் Bayern Munich தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 9 ஆவது முறையாக இம்முறையும் Bundesliga பட்டத்தை வென்றுள்ளது Bayern Munich.
அத்துடன் ஒரு பருவகாலத்தில் பெறப்பட்ட அதிக கோல்கள் என்ற Gerd Müller இன் சாதனையை Lewandowski சமப்படுத்தி உள்ளார்.
Ligue 1(France)
France இன் Ligue 1 போட்டிகளில் இம்முறை Lille முன்னிலையில் உள்ளது.
2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் Lille 79 புள்ளிகளுடன் முதலிடத்திலும் PSG 76 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும் Monaco மற்றும் Lyon அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
UEFA Champions League
இம்முறை Champions League இறுதி போட்டியில் Manchester City மற்றும் Chelsea அணிகள் மோதுகின்றன. Pep Guardialo இன் Manchester City Champions League கிண்ணத்துக்கான தொடர் முயற்சியில் இம்முறை இறுதி போட்டியை அடைந்துள்ளது. எனினும் இறுதி போட்டியில் Tomas Tuchel இன் Chelsea அணியை எதிர் கொள்கிறது. Chelsea அணி ஆரம்பத்தில் தடுமாறி இருந்தாலும் Lampard ஐ நீக்கி Tuchel Manger ஆக பதவி ஏற்றதில் இருந்து எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றது.
Manchester City அணிக்கு எதிரான FA கிண்ண அரை இறுதி போட்டி மற்றும் Premier League போட்டி என இரு போட்டிகளிலும் Tuchel உனுடைய Chelsea வெற்றி பெற்றுள்ளது. எனினும் நேற்று இடம்பெற்ற FA கிண்ண இறுதி போட்டியில் Leicester அணியுடன் தோல்வியுற்றுள்ளது.
Pep Guardialo இன் City முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றுமா அல்லது 2012 இல் சாம்பியன் ஆனது போன்று Chelsea மீண்டும் முடி சூடுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
UEFA Europa League
UEFA Europa League இறுதி போட்டியில் Manchester United மற்றும் Villarreal அணிகள் மோதுகின்றன. 2017 இற்கு பிறகு மீண்டும் Europa League கிண்ணம் வெல்லும் முனைப்பில் உள்ளது Manchester United. Manchester United இறுதியாக வெற்றி கொண்ட கிண்ணம் 2017 Europa League கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Turkish Super League
இம்முறை இறுதி போட்டிகள் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற Turkish Super League இல் Besiktas கோல் வித்தியாச முறையில் வெற்றி பெற்றுள்ளது.
Besiktas மற்றும் Galatasaray அணிகள் 40 போட்டிகளின் முடிவில் 84 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் ஒரே ஒரு கோல் வித்தியாசத்தில் Besiktas கிண்ணம் வென்றது.
European Super League
UEFA Champions League போட்டிகளுக்கு மாற்றாக பரிந்துரைக்கப்பட்ட European Super League கால்பந்தின் முன்னணி அணிகளுடன் ஆரம்பிக்க பட்டாலும் ரசிகர்களின் எதிர்ப்பில் Premier League அணிகள் பின்வாங்கிய நிலையில் Florentino Perez European Super League போட்டிகளை தடையின்றி நடத்தும் முயற்சியில் உள்ளார். European Super League தொடர்பான விரிவான அலசல் விரைவில் விளையாட்டு.com இல் எதிர் பாருங்கள்.