காவலாளி முதல் கதாநாயகன் வரை -ஷமர் ஜோசப் ❤️

காவலாளி முதல் கதாநாயகன் வரை -ஷமர் ஜோசப் ❤️

ஷமர் ஜோசப்… ????????????

இந்தப் பெயர்தான் இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. இந்த 24 வயதான வீரர் ஆஸியின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும் கபாவில பகல் பொழுதிலேயே ஆஸ்திரேலியாவுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்திருக்கிறார்.

வாழ்க்கை எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி கொடுப்பதில்லை ,எப்போதாவது ஏதோ ஒரு திசையில் இருந்து வாழ்வின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான திருப்பம் நிகழ்வதுண்டு .

இருட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் முயற்சிகளுக்கு பலன் கொடுக்கும் வாழ்வையும் வழியையும் என்றோவொரு நாள் கடவுள் ஏதோவொரு திசையில் கொண்டு வந்து சேர்ப்பார் .

ஷமர் ஜோசப்பின் வாழ்க்கையும் அப்படித்தான். அவருடைய வாழ்க்கை வரலாறை கொஞ்சம் தேடிப் பார்த்து படித்தால் மிரண்டு விடுவீர்கள். இது உங்கள் வாழ்வுக்குமான ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி ????

காயமடைந்த பிறகும் கடைசி இன்னிங்சில் 11.5 ஓவர்களில் 68 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, கபாவில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றி பெற உதவினார்.

இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே ஏராளமான வசை பாடல்கள் இருந்தன, கிட்டத்தட்ட ஏழு வீரர்கள் வரையில் புதுமுகங்களாக அணியிலே சேர்க்கப்படுகிறார்கள் .அனுபவங்கள் அற்றவர்களாகவும் ஒன்று இரண்டு போட்டிகளில் ஆடியவர்களாகவும் அந்த வீரர்கள் தோற்றம்ம் பெறுகிறார்கள் .

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆட்டக்காரர் ரோட்னி ஹோக் ஒரு கருத்தை முன்வைக்கின்ற போது சொல்லியிருந்தார் ,இந்த மேற்கிந்திய தீவுகள் அணியை பார்க்கின்ற போது பரிதாபகரமாக இருக்கிறது ,அந்த அளவிற்கு ஏளனமும் வசை பாடல்களும் இருந்தன .

ஆஸ்திரேலிய போன்ற ஒரு வேர்ல்ட் சாம்பியனை அவர்கள் மண்ணிலே வைத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இப்படி ஒரு கத்துக்குட்டியையா மேற்கிந்திய தீவுகள் தயார் செய்து அனுப்புவது என்பதுதான் எல்லோரது ஏளனமாகும் இந்த ஏளனத்துக்கு என்று முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Gabba டெஸ்ட் shamar Joseph வாழ்க்கையில் இரண்டாவது சர்வதேச போட்டியாகும், மரங்களை வெட்டுவது, கூலி வேலை செய்வது மற்றும் காவலாளியாக வேலை செய்வது என்று தன் கடந்தகாலத்தை செலவுசெய்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இரண்டாவது போட்டியிலேயே தான் கனவு கண்டதை சாதித்தார்.

சில காலம் முன்பு வரை TV, mobile , இன்டர்நெட் எதுவும் இல்லாத கிராமத்தில் இருந்து வந்த அவர், தனது பலத்தை உலகுக்குக் காட்டியிருக்கிறார்.

ஜோசப் கயானாவில் உள்ள பராகாராவில் வசிப்பவர். அவரது கிராமத்தின் மக்கள் தொகை 350 மட்டுமே. 2018 வரை, அவரது கிராமத்தில் மொபைல் அல்லது இணைய இணைப்பு இல்லை. கருப்பு மற்றும் வெள்ளை தொலைக்காட்சியும் அரிதாகவே கிடைக்கவில்லை. அவரும் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டார், ஆனால் இதற்குப் பிறகு ஒரு விபத்து அவரை கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வாழ்வு இங்கேதான் திசைமாற ஆரம்பிக்கிறது ????

உண்மையில், அவரது கிராமத்தில் உள்ளவர்கள் சம்பாதிக்க ஒரே வழி மரம் வெட்டுவதுதான். அவரது தந்தை மற்றும் சகோதரரும் அதே வேலையைச் செய்தார்கள். அவனும் தன் தந்தையுடன் அதே வேலையை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் அவர் அருகில் ஒரு மரம் விழுந்தது. மரணத்தை மிகவும் நெருக்கமாகப் பார்த்த பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டு கிராமத்தை விட்டும் வெளியேற முடிவு செய்தார்.

வேலை தேடி நியூ ஆம்ஸ்டர்டாமுக்கு சென்றார். அங்கிருந்து படகில் தனது வீட்டை அடைய அவருக்கு இரண்டு நாட்கள் ஆகும். தொழிலாளியாகவும், காவலாளியாகவும் பணியாற்றி வருகிறார்.

முதலில் அவர் நியூ ஆம்ஸ்டர்டாமில் ஒரு தொழிலாளியாக பணிபுரிந்தார், ஆனால் உயிர் பயம் காரணமாக அவரால் அந்த வேலையை சரியாக செய்ய முடியவில்லை. இதன்பின் அங்கு காவலாளியாக பணிபுரிந்து குடும்பத்திற்கு பண உதவி செய்து வந்த நிலையில் காவலாளி பணியின் காரணமாக விளையாடும் பொழுது போக்கை நிறைவேற்ற முடியவில்லை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பந்துவீச்சு பயிற்சி செய்வார். இதற்குப் பிறகு, தனது வருங்கால மனைவியின் ஆதரவைப் பெற்ற பிறகு, அவர் வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் வீரராகும் தனது கனவை நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்தினார். இவர் கடந்த ஆண்டு வரை காவலாளியாகவே பணியாற்றி வந்தார்.

அறிமுக தொடரில் ஜோசப்பின் ஆட்டம் ????

கடந்த ஆண்டு தான் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவில் நடந்த முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது.

அறிமுக ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 36 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கடைசி இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் அடங்கும். 216 ரன்கள் இலக்குக்கு பதிலடியாக இருந்த ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்சை 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய உதவினார்.

கால்விரலில் காயம் இருந்தபோதிலும், அவர் பந்துவீசி வரலாறு படைத்தார். நேற்று மேற்கிந்திய தீவுகள
துடுப்படுத்தாடிக் கொண்டிருந்தபோது மிச்சல் ஸ்டார்க் வீசிய ஜோக்கர் பந்தில் இவருடைய பெருவிரலின் முன்பகுதி உபாதைக்கு உள்ளானது, இதனால் மைதானத்தை விட்டு சகாக்களினுடைய துணையோடு வெளியேறிய அவரால் இன்று எப்படி பந்து வீச முடிந்தது என்பதுதான் ஆச்சரியம் .

அணி தலைவரிடம் சொல்லி இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் இறுதி விக்கெட் வீழும் வரை நான் பந்து வீசுவேன் என்று விடாப்பிடியாக தன் வேட்கையை காண்பித்திருக்கிறார் ஷமர் ஜோசப் .

ஆஸ்திரேலியாவிற்கு Gabba என்பதே மிகப்பெரிய ஒரு கோட்டை கடந்த 25 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியா அங்கே வெறுமனே 2 ஆட்டங்களிலே தான் தோற்றுருக்கிறது ஒன்று இந்தியாவிடம் மற்றையது இன்று மேற்கிந்திய தீவுகளிடம்.

ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் இறுதி 39 டெஸ்ட் போட்டிகளிலே இவர்கள் 5 தடவைகள் தான் தோற்று இருக்கிறார்கள் ,நான்கு தடவைகள் இந்தியாவிடம் ஒரு தடவை மேற்கிந்திய தீவுகளிடம் .

அதைவிடவும் இப்போதுதான் ஆஸி டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை வென்றிருக்கிறது ???? உலக சாம்பியன் ஆகவும் ஒரு நாள் போட்டிகளில் மகுடம் சூடி இருக்கிறது, இப்படியான வரலாற்றுச் சாதனைகள் எல்லாவற்றையும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆஸி கத்துக்குட்டியான மேற்கிந்திய தீவுகளிடம் சோடை போனமைதான் கிரிக்கெட் விரும்பிகளின் மிகப்பெரிய விருப்புக்குரிய விடயம் என சொல்லலாம் .

டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தாலும், இங்கிலாந்து இந்தியாவிலும் & ஆஸ்திரேலியாவில் மேற்கிந்திய தீவுகளும் ஆடி இருக்கின்ற இன்றைய டெஸ்ட் ஆட்டம் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் உயிர்ப்போடுதான் வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு சான்று பகர்கின்றன ????

#AUSvWI #INDvENG #Samarjiseph

✍️ தரணிதரன் ❤️