காஷ்மீர் பிரீமியர் லீக் (KPL) – அஃப்ரிடிக்கு அபராதம்..! (வீடியோ இணைப்பு )

காஷ்மீர் பிரீமியர் லீக் (KPL) -முசாபராபாத் டைகர்ஸ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ராவலக்கோட் ஹாக்ஸின் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு தனது போட்டி கட்டணத்தில் ஐந்து சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஹாக்ஸ் புலிகளை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் காஸ்மீர் பிரிமியர் லீக் கோப்பையை ராவலக்கோட் ஹாக்ஸின் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கைப்பற்றினார்.

அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஜீஷன் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஜீஷன், அஃப்ரிடியின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார், இது அவரை ஆக்ரோஷமாக கோபத்துக்குள் ஆக்கியது, அதனால் முரட்டுத்தனமாக அவரை Send off சைகை காட்டி வெளியேற்றினார் அஃப்ரிடி.

இதன் காரணத்தால் இறுதி போட்டியின் நடுவர் அலி நக்வி இந்த விவகாரம் தொடர்பாக அஃப்ரிடியிடம் கேள்வி எழுப்பி விசாரணை முன்னெடுக்கப்பட்டது, குறித்த சம்பத்தில் அஃப்ரிடி தனது தவறை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

44 வயதான அஃப்ரிடியின் இந்த செயலால் “வயசானாலும் உங்க Aggressive குறையவே இல்ல சார்” என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ இணைப்பு ???