கிண்ணியா அக்ஷ்ஸா கல்லூரி பழைய மாணவர்களின் அக்ஷ்ஷேரியன் சுப்பர் லீக்.

கிண்ணியா அக்ஷ்ஸா கல்லூரி விளையாட்டில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் அக்ஷ்ஷேரியன் சுப்பர் லீக் 2021.02.19வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அல் அக்ஷ்ஷா கல்லூரியில் உதைபந்தாட்டத்தில் பங்கு கொண்ட பழைய மாணவர்களை ஒன்றிணைத்து அவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

சுற்றுப்போட்டி லீக் முறையில் நடத்தவுள்ளதாக சுப்பர் லீக் அமைப்பின் நிறுவனர் நபீல் ஆசிரியர் தெரிவித்தார்.

சனிக்கிழமை 2021.02.06 கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நபீல் ஆசிரியர் மேலும் கருத்து தெரிவிக்கையில் அல் அக்ஸா கல்லூரியை சர்வதேசரீதியாக உதைபந்தாட்டத்தில் பெயரை ஏற்படுத்தியுள்ளது. பல வீரர்கள் தேசிய மட்டத்திலும் இலங்கை அணி சார்பில் சர்வதேச மட்டத்திலும் போட்டிகளில் பங்கு கொண்டுள்ளார்கள். உதைபந்து மூலம் அல் அக்ஷ்ஸாவின் நாமம் உலக அரங்கில் பரவியுள்ளது.

உதைபந்து வீரர்கள் 164 பேரை ஒன்றிணைத்து அவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.

முதல் போட்டி எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை 2021.02.19 மாலை கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்படும்.

இம் மைதானம் நகர சபையினால் மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு மின்னூட்டம் ஏற்படுத்தப்பட்டால் மின்னொளியில் போட்டி ஆரம்பித்து வைக்கப்படும். இதற்கான நடவடிக்கையை கிண்ணியா நகரசபை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வெற்றி கிண்ணத்துடன் 50,000 ரூபா பணப்பரிசும் இரண்டாமிடம் பெறும் அணிக்க்கு 40 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 30 ஆயிரம் ரூபாவும் நான்காவது இடம் பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணங்களுடன் வழங்கி வைக்கப்படும்.

இவற்றுக்கு மேலாக இப்போட்டியில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு வீரருக்கும் தலா பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் பெறுமதியான கையடக்க தொலைபேசியும் வழங்கி வைக்கப்பட உள்ளது.

அனுசரணையை திருகோணமமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வழங்கியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து வெற்றிக்கிண்ணம் அறிமுகமும் அணிதலைவர்கள் அறிமுகமும் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் வெற்றிக்கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

இறுதிப்போட்டி 2021.02.22 மாலை நடைபெறும்.

 

தகவல் -சசிக்குமார் (ஆசிரியர்)