கிரிக்கெட்டுக்காக ஹொங்கொங் வீரர்கள் செய்யும் தியாகம்- அதிகமானவர்கள் Food delivery செய்கின்றனர்-பயிற்சியாளரின் கருத்து..!

ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட சிரமப்பட்டனர் எனும் செய்தி வெளியாகியுள்ளது.

ஐசிசி நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நமீபியா, உகாண்டா மற்றும் ஜெர்சி அணிகளுக்கு எதிராக அந்த அணி விளையாடி வருகிறது.

ஹாங்காங் வீரர்கள் பின்னர் ஆயத்த சுற்றுப்பயணங்களின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் செய்தனர், அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை 2022 மற்றும் டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகள் என்று ஓமான் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினர்.

வீரர்கள் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடுவதில்லை மற்றும் தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல மற்ற வேலைகளை நம்பியிருக்க வேண்டும் என்றும் ஹாங்காங் பயிற்சியாளர் ட்ரென்ட் ஜான்ஸ்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிள்ளார்,

விளையாட்டின் மீது வீரர்களின் ஆர்வத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் அவர் வெளிப்படைத்தினார் .

 

ஆசிய கோப்பை 2022: HK வீரர்களின் கஷ்டங்களை ஹாங்காங் பயிற்சியாளர் வெளிப்படுத்தினார்

ஹாங்காங் கிரிக்கெட் வீரர்களுக்கு, கிரிக்கெட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பது முடியாத காரியமாக உள்ளதால் சம்பளத்துக்காக வேறு வேலைகளே அவர்களின் ஒரே வருமானம். இருப்பினும், ஹாங்காங் பயிற்சியாளர் ட்ரெண்ட் ஜான்ஸ்டன் Espncricnfo க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், வீரர்கள் விளையாட்டின் மீது எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை தெளிவுபடுத்தினார்,

“அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு அபரிமிதமானது. அவர்கள் எதையும் கேள்வி கேட்கவில்லை அல்லது புகார் செய்யவில்லை, ஆனால் அதைச் சமாளித்தார்கள். மூன்று அல்லது நான்கு வீரர்கள் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் கிளப்பில் அல்லது ஒருவருக்கு ஒருவர் பயிற்சி அளிக்கிறார்கள்.”

“அதிக சதவீதமானவர்கள் food டெலிவரி டிரைவர்கள். துணை கேப்டனான கிஞ்சித் ஷா, நகை வியாபாரத்தில் இருக்கிறார். ஸ்காட் மெக்கெக்னி தனது சொந்த தொழிலைக் கொண்டுள்ளார்.

எங்கள் தொடக்க பந்து வீச்சாளர் இளம் ஆயுஷ் [சுக்லா] பல்கலைக்கழகத்தில் இருக்கிறார். இரண்டு பேர் management செய்கிறார்கள்”.

அவர் மேலும் கூறுகையில், “அவர்கள் அனைவரும் கடந்த மூன்று மாதங்களாக கிரிக்கெட் விளையாடுவதற்கு நிறைய தியாகம் செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு என்னால் நன்றி சொல்ல முடியாது. தங்கள் தந்தை திரும்பி வருவார் என்று காத்திருக்கும் மனைவிகள் மற்றும் தோழிகள், குழந்தைகள் ஏராளம் உள்ளனர்.

இப்படியான தியாகங்களுக்கு மத்தியில் நிலையான வருமானமின்றியே ஹொங்கொங் வீரர்கள் கிரிக்கெட் ஆடுகின்றனர் என தெரிவித்தார்.