கிரிக்கெட் உணர்வை மதிக்காத கிரன் பொல்லார்ட், 37 பந்துகளில் சதம் விளாசிய பூரான்..! ( சுவாரசிய வீடியோ)

கிரிக்கெட் உணர்வை மதிக்காத கிரன் பொல்லார்ட், 37 பந்துகளில் சதம் விளாசிய பூரான்..! ( சுவாரசிய வீடியோ)

டிரினிடாட் T10 ஆட்டத்தின் போது நிக்கொலஸ் பூரான் ஸ்விட்ச்-ஹிட் விளையாட முயற்சித்த பிறகு பூரன் மீது கோபத்தில் பந்தை வீசிய கீரன் பொல்லார்ட் தொடர்பில் கிரிக்கட் ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்கார்ச்சர்ஸ் அவர்களின் 10 ஓவர்களில் 128/3 ரன்களை குவித்தனர், பொல்லார்ட் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

பதிலுக்கு, பூரன் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திரும்பினார். பொல்லார்ட் தனது 2 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

போட்டியில் நாலாபுறமும் பந்துகளை விரட்டிக் கொண்டிருந்த நிக்கோலஸ் பூரன் இன் அதிரடியில் நிலைகுலைந்து போன பொல்லார்ட் , கிரிக்கெட் உணர்வுக்கு மதிப்பளிக்காது நடந்து கொண்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களாலும், சமூக வலைத்தளங்களிலெம் அதிகம் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் கேப்டனும் உதவி கேப்டனும் இவ்வாறு ஆளுக்கு ஒருவர் முட்டி மோதி உள்ளனர்.

வீடியோ இணைப்பு