கிரிக்கெட் உலகம் மிரண்டு பார்த்த பான்டின் அதிரடி சிக்ஸ் …! (வீடியோ )

கிரிக்கெட் உலகம் மிரண்டு பார்த்த பான்டின் அதிரடி சிக்ஸ் …! (வீடியோ )

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்றைய 2 ம் நாள் நிறைவில் பலமான நிலையை எட்டியுள்ளது.

போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியா தடுமாறினாலும், இளம் வீரர்கள் பான்ட் மற்றும் சுந்தர் இணைந்து இந்தியாவுக்கு சத இணைப்பாட்டம் புரிந்து அணியைக் காப்பாற்றினார்.

இன்றைய நாள் நிறைவில் 3 விக்கெட்டுக்கள் கையிருப்பில் இருக்க இந்திய அணி 89 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

ரிஷாப் பான்ட் இன்று தனது 3 வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
சர்வதேச கிரிக்கெட் உலகில் மிரள வைக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டேர்சனது வேகப்பந்து வீச்சை ரிவேர்ஸ் சுவீப் மூலமாக பான்ட் அடித்த சிக்ஸ் இன்று எல்லோரையும் மிரள வைத்தது.

சுழல் பந்து வீச்சாளர்களது பந்தை ரிவேர்ஸ் சுவீப் மூலம் ஆடுவது எல்லோருக்கும் பரீட்சயமானது, ஆனால் ஆண்டர்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஒருவரது பந்துவீச்சை இவ்வாறு எதிர்கொள்ளவும் ஒரு திறமை வேண்டும்தான்.

பான்ட்- இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.

வீடியோ…!