கிரிக்கெட் கடந்த நட்பு- சுவாரசிய சம்பவம்…!

கிரிக்கெட் கடந்த நட்பு- சுவாரசிய சம்பவம்…!

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருப்பது தொடரை நியூசிலாந்து அணி 3-2 என்று கைப்பற்றியது.

இந்த நிலையில் 3 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கா IPL இல் 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜிம்மி நீசம் பந்துவீச்சை ,RCB அணிக்காக 14 .25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் மக்ஸ்வெல் துவம்சம் செய்தார்.

ஒரே ஓவரில் 30 ஓட்டங்களை விளாசித்தள்ளினார், இந்த சம்பவம் நிகழ்ந்தாலும் குறித்த போட்டி தொடர் நிறைவுக்கு வந்த பின்னர் நீசம் தனது சீருடையில் கையொப்பம் இட்டு மக்ஸ்வெல்லுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி நிறைவுக்கு வந்த பின்னர் இருவரும் தத்தமது ஜேர்சியை பரிமாற்றிக்கொண்டமை கிரிக்கெட்டின் கனவான் தன்மையை காட்டுக்குவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.