கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்த இலங்கையின் ஈட்டி எறிதல் தங்க மகன் தினேஷ் பிரியந்த..!

கிரிக்கெட் பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்த இலங்கையின் ஈட்டி எறிதல் தங்க மகன் தினேஷ் பிரியந்த..!

இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு சாதனையை இலங்கையின் பரா ஒலிம்பிக் வீரர் தினேஷ் பிரியந்த நிலைநாட்டியுள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பில் மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டி, உலக சாதனையோடு பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டார் தினேஸ் பிரியந்த எனும் ராணுவ வீீரர்.

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் டங்கன் வைட், சுசந்திகா ஜயசிங்க ஆகியோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பின்னர், பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் இலங் கைக்கு கிடைத்திருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒலிம்பிக் பதக்கங்களுக்கு நிகராக கொண்டாடப்படும் பரா ஒலிம்பிக்கின் தங்கப் பதக்க நாயகனை ஏராளமான கிரிக்கெட் நட்சத்திரங்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் 67.79 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையோடு பரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் தினேஸ் பிரியந்த சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

?????