கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி உதாரணபுருசரான நடராஜன் ..!

கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி உதாரணபுருசரான நடராஜன் ..!

இந்திய அணியின் யார்கர் நாயகன் எனும் பெயருக்கு சொந்தகாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் தங்கராசு. இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகையிலான போட்டிகளிலும் அறிமுக வீரராக களமிறங்கி சாதனைப்படைத்தார்.

இந்நிலையில் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் நடராஜன், தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டமைத்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பதிவிடுகையில், “எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். அதற்கு நடராஜன் கிரிக்கெட் மைதானம் (என்சிஜி) எனப் பெயரிடப்படவுள்ளது. கடந்த டிசம்பரில் முதன்முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கினேன். இந்த டிசம்பரில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருகிறேன். கனவுகள் நிஜமாகும். கடவுளுக்கு நன்றி” என பதிவு செய்துள்ளார்.

யார்க்கர் பந்துகளுக்குப் பெயர்போன நடராஜன் 2020-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் மேலும் பிரபலமானார். இதையடுத்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணிக்குத் தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.

#ABDH