கிரிக்கெட், வலைப்பந்து சாம்பியன்களுக்கு இராப்போசனம் வழங்கிய ஜனாதிபதி- விசேட பரிசுத் தொகைகளும் அறிவிப்பு…!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் அணி, வலைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநாலவாய போட்டியாளர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்து இன்று சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதற்காக இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் வீரர்கள் மற்றும் கிரிக்கட் அதிகாரிகள், வலைப்பந்தாட்ட அணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, நிகழ்வின் போது இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அஸ்திய வைத்தியசாலைக்கு 5 இலட்சம் டொலர்களை நன்கொடையாக வழங்கியதுடன் வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா தலா 20 லட்சம் ரூபாய்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மே மாதம் இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளை இரண்டு மில்லியன் டொலர்களை வைத்தியசாலைக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தது.

இதேநேரம் பொதுநலவாய போட்டிகளில்
வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டு நிதியில் இருந்து 5 மில்லியன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு குறித்த தொகையின் 25% வீதம் வழங்கவும் நடவிடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.