கிரிஸ் கெயில் வாணவேடிக்கை …!

அபுதாபியில் இடம்பெற்றுவரும் T10 போட்டிகளில் நேற்றைய நாளில் இடம்பெற்ற போட்டியொன்றில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி நாயகன் கிரிஸ் கெயில் வாணவேடிக்கை நிகழ்த்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

41 வயதான கெயில் இன்னும் கிரிக்கெட் களத்தில் அதே துடிப்புடன் பயணித்துக்கொண்டிருக்கின்றமை வியப்பானதே.

மராத்தா அரேபியன்ஸ் மற்றும் டீம் அபுதாபி அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய மராத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு ஆடிய டீம் அபுதாபி 5.3 ஓவர்களில் 100 ஓட்டங்களை பெற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

கெயில் ஆட்டமிழக்காது 22 பந்துகளில் 84 ஓட்டங்களை பெற்றார்.
இதிலே 6 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் பறந்தமை குறிப்பிடத்தக்கது.