கீகன் பீட்டர்சனை பாராட்டிய டி வில்லியர்ஸ்
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் 28 வயது கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி 72 ரன்கள் எடுத்தார். தனது 5ஆவது டெஸ்டில் விளையாடும் பீட்டர்சன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரு அரை சதங்கள் எடுத்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக கீகன் பீட்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
தனது பேட்டிங் திறமையால் அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ள பீட்டர்சனை பிரபல வீரர் டி வில்லியர்ஸும் பாராட்டியுள்ளார்.
டிவில்லியர்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “சுருக்கமாகச் சொல்வதென்றால் பீட்டர்சனால் சிறப்பாக விளையாட முடியும். உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக வெளிப்பட்ட அவருடைய நிதானம், திறமை, தொழில்நுட்பத்தால் நான் மிகவும் ஆர்வமடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
#Abdh