குசலின் அறுவைச்சிகிச்சை தொடர்பான தகவல்…!

குசல் ஜனித் பெரேரா அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்

ஒரு காலத்தில் இலங்கை அணியின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரராக இருந்த குசல் ஜனித் பெரேரா, சில காலமாக தோள்பட்டை உபாதையால் அவதிப்பட்டு வந்தார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாட முயன்றார், ஆனால் அவரது காயம் காரணமாக அவரால் தனது வழமையான அதிரடி நிலைக்கு திரும்ப முடியவில்லை.

குசல் ஜனித் ஒத்திவைத்து வந்த தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள சத்திரசிகிச்சைக்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்து செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஆறு மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், டுவென்டி 20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியாது என அறியவருகிறது.