குசல் பெரேராவுக்கு தோள்பட்டை உபாதை, இந்திய தொடரில் விக்கெட் காப்பாளராகவும் வாய்ப்பு பெறும் இரு இளம் வீரர்கள்…!
இலங்கை கிரிகட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் ,கொண்ட தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது .
இதற்கான பயிற்சிகளில் இரு அணிகளும் ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குசல் பெரேரா தோள்பட்டை உபாதை காரணமாக இந்திய தொடரில் தவற விடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் .
இதன் காரணத்தால் இலங்கையின் விக்கெட் காப்பாளராக யார் விளையாடுவார் எனும் கேள்வி ரசிகர்களுக்கு இருக்கிறது, ஏற்கனவே அணியில் இருந்த டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் இங்கிலாந்தில் மேற்கொண்ட தவறான நடத்தை காரணத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் காரணத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக அறியவருகின்றது.
மினோட் பானுக , லஹிரு உதார இருவரில் ஒருவர் தொடரில் விக்கட் காப்பாளராக விளையாடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.