பங்களாதேஷ் சுற்றுலா செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் விபரம் இன்றைய நாளில் குசல் பெரேரா தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது.
18 பேர் கொண்ட பெயர் விபரம் விளையாட்டு துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய நாளிலேயே அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் டிமுத கருணாரத்ன தலைமைத்துவதிலிருந்து நீக்கப்பட்டு, குசல் பெரேரா தலைவராக அறிவிக்கப்பட, அவருக்கு உதவியாக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
திமுத் கருணாரத்ன, மத்தியூஸ், சந்திமால், திசார பெரேரா, லக்மால், நுவான் பிரதீப் போன்ற சிரேஷ்டா வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.