இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இதுவரை செயற்பட்ட திமுத் கருணாரத்ன, தலைமைத்துவத்திலிருந்து மட்டுமல்லாது அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஒரு முட்டாள் தனமான முடிவு ?
(அத்தப்பத்து , டிராவிட் போன்றோர் ODI போர்மட்டில் சாதிக்கவில்லையா) ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு சரியான தீர்மானத்தை தவறான நேரத்தில் எடுத்திருக்கிறது என்றே சொல்வேன் ? இலங்கை கிரிக்கெட்டை பொறுத்த வரையில் திமுத் கருணாரத்ன நீக்கப்பட்டது தூரநோக்குடன் சரியான தீர்மானமாக இருந்தாலும், இது ஒரு தவறான நேரமாக பார்க்கப்படுகிறது .
இலங்கை கிரிக்கெட் அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருகின்றமை மிகப்பெருமளவில் பாராட்டப்படக் கூடிய விடயம் என்பேன்.ஆனால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டமை மிக மோசமான பின்னடைவுகளை இலங்கைக்கு ஏற்படுத்தவல்லது . அடிக்கடி உபாதைகளால் அவதிப்பட்டு ஃபிட்னஸ் சரியாக மெயின்டெயின் செய்ய முடியாத வீரர்களில் ஒருவராக குசல் பெரேராவும் இருக்கிறார்.
அணியில் தொடர்ச்சியான இடத்தையே பிடிக்க முடியாது உபாதைகளால் அவதிப்படும் ஒருவர் எப்படி அணித்தலைவராக முடியும் என்பதே என்தரப்பு வாதம் .இலங்கை அணியின் தலைவராக வேண்டிய இரண்டு தரமான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் , மிகச்சிறந்த கிரிக்கட் நுட்பமுடைய நிரோஷன் டிக்வெல்ல அதில் முதன்மையானவர் .
(நீங்கள் திட்டுவீர்கள் , ஆனால் டிக்கா மிகச்சிறந்த கப்ட்னாகவல்ல அடிப்படைத் தகுதிகள் கொண்டவர் )இரண்டாமவர் குசல் மென்டிஸ் ? (T20 போட்டிகளுக்கு வேண்டுமானால் தசுன் சானக்க தரமான தலைவர் , ODI க்கு அவர் தன்னை நிரூபித்தாக வேண்டும் )
டிக்கா, மென்டிஸ் இவர்களிருவரும் தயாராகும் காலம் வரைக்குமாவது திமுத்தின் தலைமைத்துவத்தை தொடர்ந்து இருக்கலாம் என்பதுதான் என்வாதம் .
மத்தியூஸின் விலகலுக்குப் பின்னர் அதலபாதாளத்தில் கிடந்த இலங்கை அணியை கரைசேர்க்கும் மாலுமியாக திமுத் மாறியிருந்தார்.
திமுத்தை நீக்கியது நீண்டகால அடிப்படையில் சரியென்றாலும் குசல் பெரேரா மீது எனக்கு நம்பிக்கையில்லை ? திமுத் தலைவராக விளையாடிய 17 போட்டிகளிலேயே KJP 4 போட்டிகளில் உபாதை நிமித்தம் பங்கேற்க முடியவில்லை என்பதும் முக்கியமானது .
புள்ளி விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம் ✌️
#T.Tharaneetharan
FB post