குசல் பெரேரா விலகல் -மாற்று வீரர் அறிவிப்பு..!

வைரஸ் காய்ச்சல் காரணமாக குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை.

குசல் ஜனித்துக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்லவை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிரோஷன் திக்வெல்ல இன்று பங்களாதேஷ் செல்லவுள்ளார்.