குசல் மெண்டிஸுக்கு கொரோனா -விக்கட் காப்பாளர் யார் தெரியுமா ?

தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அணியில் கோவிட் தொற்று பதிவாகியுள்ளது.

இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானகவின் கூற்றுப்படி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசல் மெண்டிஸ் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பிங் கடமையை தினேஷ் சண்டிமால் செய்ய வாய்ப்புள்ளதாக இலங்கை அணித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சாமிக்க கருணாரத்ன, தற்போது குணமடைந்து இன்று இரவு அவுஸ்திரேலியாவில் அணியுடன் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.