குசல் மெண்டிஸுடன் சண்டைக்கு போன சாமிக கருணாரத்ன- சமாதானப்படுத்திய தசுன் சானக்க (வீடியோ)

குசல் மெண்டிஸுடன் சண்டைக்கு போன சாமிக கருணாரத்ன- சமாதானப்படுத்திய தசுன் சானக்க (வீடியோ)

இலங்கையின் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கின்றன, போட்டி தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்றைய (17) நாளோடு நிறைவுக்கு வந்துள்ளன.

 இந்த நிலையில் Play off சுற்றுக்கான அணிகளாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தம்புள்ள, காலி அணிகளுக்கிடையிலான குழுநிலைப் போட்டி ஒன்றின் போது சாமிக்க கருணாரத்ன மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சண்டையிட பார்த்த ஒரு சம்பவம் பதிவானது .

சாமிக்கவினுடைய பந்தை தட்டி விட்டு இரண்டாவது ஓட்டத்தை பெறுவதற்காக குசல் மெண்டிஸ் முற்பட்ட போது, அந்த பந்தை எடுத்து சில வார்த்தைகளைப் பேசி பந்தை வீசி எறிய முற்பட்டார்.

இருப்பினும் இதனை அவதானித்த அணித்தலைவர் தசுன் சானக்க இடை நடுவே வந்து அவரை சமாதானப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது .

 வீடியோவை பாருங்கள் ???