குசல் மெண்டிஸ் தொடர்பில் சமித் பட்டேல் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை…!
குசல் மெண்டிஸை மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சமித் படேல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்காக குசல் மெண்டிஸுடன் இணைந்து விளையாடிய சமித் படேல் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார்.
குசல் மெண்டிஸ் அடுத்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தகுதியுடையவர் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
போட்டியில் 327 ரன்கள் குவித்த குசல் மெண்டிஸ் போட்டியின் ஆட்டநாயகனாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். அவிஷ்க பெர்னாண்டோ போட்டியின் நாக் அவுட் போட்டிகளில் தனது பங்களிப்பிற்காக போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
“கிரிக்கெட் ஒருபோதும் நீங்கள் விரும்பியபடி செயல்படாது. எனது கருத்துப்படி குசல்மெண்டிஸ் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக திகழ்கின்றார் . அவரை மீண்டும் தனது நாட்டிற்காக விளையாட அனுமதிக்கும் நேரம் இது என்று நினைக்கிறேன் என சமித் படேல் ட்வீட் செய்துள்ளார்.
குசல் மெண்டிஸ், தனுஷ்க்க குணதிலக, டிக்கவெல்லா ஆகியோருக்கு போட்டி தடை விதிக்கப்பட்டு அவர்கள் அதிலிருந்து மீண்டுள்ள நிலையிலேயே சமித் படேல் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.