குத்தி காட்டிய ஹைடன்.. மாஸ் பதிலடி தந்த கோலி.. இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்த கிங் விராட்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர் சி பி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் விராட் கோலி 18 ஆண்டு கால கனவை நினைவாக்கி இருக்கிறார். இந்த சூழலில் வெள்ளை நீற பந்து கிரிக்கெட்டில் அனைத்து கோப்பையும் விராட் கோலி வென்று இருக்கிறார்.
ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு தன்னுடைய மகிழ்ச்சியை விராட் கோலி மேத்யூ ஹைடனிடம் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பேசிய ஹைடன், நீங்கள் அனைத்து கோப்பையும் வென்று விட்டீர்கள். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மட்டும் வெல்லவில்லை.
அப்படி இருக்கும்போது ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றீர்கள் என்று கேள்வி கேட்டார். இதனால் கொஞ்சம் எமோஷனலான விராட் கோலி, எனக்கு இது சரியான தருணம் என்று தோன்றியது. அதனால் தான் நான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றேன். கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த தருணங்கள் இருக்கின்றது.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது முற்றிலும் மேலானது. நான் அந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கின்றேன். நான் அந்த அளவுக்கு டெஸ்ட் போட்டிகளை நேசிக்கின்றேன். நான் இளைஞர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் எந்த கிரிக்கெட்டை விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை மரியாதையுடன் அணுகுங்கள்.
நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால் உலகில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பலரும் உங்களிடம் வந்து கைகுலுக்கி சிறப்பாக விளையாடினீர்கள் என்று சொல்வார்கள். உலக கிரிக்கெட்டில் உங்களுக்கு மரியாதை வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்து விளையாடுங்கள்.
உங்களுடைய இதயத்தையும் உங்களுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் மீது செலுத்துங்கள். அதை செய்தால் நிச்சயம் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் பல அதிசயங்கள் நிகழும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உங்களை மதிக்கும். உங்களைப் போன்ற ஜாபவான்கள் போன்றவர்களின் மரியாதையை பெற வேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விளையாட வேண்டும் என்று விராட் கோலி தெரிவித்தார்.