2022.02.16
சி.சசிகுமார்
திருகோணமலை.
குத்து சண்டை சர்வதேசப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு இந்துகா கணேஸ் அவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு இன்று 16.2.2022 காலை திருகோணமலையிலா நடைபெற்றது.
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் சமயநிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அங்கிருந்து ஊர்வலமாக கடற்படைதள வீதி வழியாக நகர மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
புனித மரியால் கல்லூரி மாணவர்களின் மேலைத்தேய வாத்தியத்துடன் கல்லூரி முன்றலில் இருந்து நகர மண்டபம் வரை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருகோணமலை Pledge to Restore அமைப்பினரும் செல்வி இந்துகா கணேஸ் அவர்களை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவல்
கிழக்கு மாகாண முந்நாள் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி
புனித சூசையப்பர் கல்லூரி அதிபர் அருட்தந்தை அல்பிரட் விஜயகமலன்
புனித மரியாள் கல்லூரி அதிபர் அருட் சகோதரி நிரோஷா
விபுலானந்தா கல்லூரி அதிபர் ஆர்.ஜெரோம் ஆகியோரும் கலந்து சிறப்பித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நகர வர்த்தகர்கள் சமுக ஆர்வலர்களும் விளையாட்டு பிரியர்களும் பாராட்டுகளை வழங்கினர்.