கும்ப்ளேவின் சாதனையை முறியடித்தார் அஸ்வின்..!

கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின், அவர் முத்தையா முரளிதரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கும்ப்ளே போன்ற பந்து வீச்சாளர்களின் உயரடுக்கு (Elite) வட்டத்தில் இணைந்தார்.

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:

முத்தையா முரளிதரன் சொந்த மண்ணில் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 493 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்தில் 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட் சொந்த மண்ணில் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 398 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அஸ்வின் இதுவரை இந்தியாவில் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 352 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அனில் கும்ப்ளே சொந்த மண்ணில் 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாதனையை அஸ்வின் கடந்துள்ளார்.

அத்தோடு இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக தடவைகள் ஐந்து விக்கெட் பெறுதியை பெற்றுக் கொண்ட சாதனையையும் அஸ்வின் சமன் செய்துள்ளார்.

99 ஆவது டெஸ்ட் போட்டியில் 35 வது தடவையாக அஸ்வின் ஐந்து விக்கெட் (Fifer) பெறுதியை பெற்றுக் கொண்டார், ஏற்கனவே முன்னாள் சுழல் பந்தாளர் கும்பளே 35 தடவைகள் ஐந்து விக்கெட் பெறுதியை பெற்றுக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.